“அதிமுக கட்சி ஆட்சியில் இருப்பதே பாரதீய ஜனதா கட்சி போட்ட பிச்சை” என்று தனியார் தொலைகாட்சி ஒன்று பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தமிழகத்திலும் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். பாரதீய ஜனதா கட்சியின் கைபாவை அரசு அதிமுக அரசு உள்ளது. மேலும் பாரதீய ஜனதா கட்சி கொடுக்கும் தைரியத்தாலேயே அதிமுக அரசே நடக்கிறது என்றார்.
மேலும், பாஜக ஆட்சி மாறினால் அதிமுக அரசு கலகலத்துவிடும் என்றும், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தமிழகத்திலும் மாற்றம் வரும் என்றார்.




