பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் ‘உயர்ந்த மனிதன்’. இந்த படத்தில் நடிகர் ⭐எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகர் எஸ்.ஜே.சூர்யா ட்விட்டரில் வெளியுட்டுள்ளார். அதில், என்னுடைய வாழ்நாளில் மிகவும் சந்தோஷமான நாள் இதுதான். எனது கனவு ☺நனவான இந்த நேரத்தில் அம்மா, அப்பா, கடவுள் ஆகியோர்களுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முருகதாஸ் ஆகியோர்களுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.
Popular Categories




