அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 7 தொகுதிகள் ?

சற்றுமுன் சென்னை தமிழகம்
piyush goyal thambidurai - 2026
File Picture

அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப் படவில்லை எனினும், இது குறித்த தகவல் வெளியானது.

பாஜக சார்பில் பியூஸ் கோயல் , தமிழிசை , பொன்.ராதாகிருஷ்ணன் , முரளிதரராவ் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். இந்த சந்திப்பின் போது அதிமுக , பாஜக கூட்டணி குறித்து இறுதி செய்யப்படும் எனக் கூறப்பட்டது.

முன்னதாக, அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த சென்னை வந்தார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்! தமிழக பாஜக., தேர்தல் பொறுப்பாளரான பியூஸ் கோயல், ஏற்கனவே அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக பிப்ரவரி 14 சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனிடையே அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 7 முதல் 10 தொகுதிகள் கேட்கப் பட்டதாகவும், அதற்கான சாத்தியங்கள் குறித்து பேசப்பட்டதாகவும் கூறப்படது. இந்நிலையில்,  அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதனிடையே, தேமுதிக தரப்பினர் காத்திருப்பில் உள்ளனர். அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் தற்போது பாஜகவுடன் அதிமுக தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் தொகுதி எண்ணிக்கை, இனம் காணப் படுதல் குறித்த பேச்சு நடைபெற்று வருவதாகவும், இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் தேமுதிகவுடனான பேச்சுவார்த்தையும் இறுதி செய்யப்பட்டு இன்றே போட்டியிடும் தொகுதிகள் குறித்து தகவல்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.