வாரிசு என்ற காரணத்துக்காக வாய்ப்பு மறுக்கப்பட வேண்டுமா?: கனிமொழி கேள்வி!

Published:

kanimoshi karuna - 2026

தலைவரின் வாரிசு என்ற காரணத்துக்காக, போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப் படவேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார் திமுக.,வின் கனிமொழி!

கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது…

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய மக்கள் மீது அரசு கட்டவிழ்த்த வன்முறையை நாம் கண்கூடாக கண்டோம். ஜி.எஸ்டி மூலம் தூத்துக்குடி தொகுதியில் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி தொகுதியில் அடிப்படை வசதி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்த உழைப்பேன்.

தொடர்ந்து கழக உறுப்பினராக இயங்கி கொண்டிருப்பவர்களுக்குதான் வாய்ப்பு அளித்துள்ளது தலைமை. வாரிசுகள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட வேண்டும் என்பது சரியல்ல என்று கூறினார்.

திமுக.,வில் தகுதியும் திறமையும் கொண்ட பலர் புறக்கணிக்கப் பட்டுள்ளதாகவும், அரசியல் வாரிசுகளுக்கே மீண்டும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்படும் நிலையில், கனிமொழி இத்தகைய கருத்தைத் தெரிவித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img