அன்புத் தங்கை கனிமொழிக்காக… தூத்துக்குடியில் இருந்து வைகோ..!

Published:

11 July30 Vaiko - 2026

வரும் 22ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை தூத்துக்குடியில் தொடங்குகிறேன்..எ ந்று கூறியுள்ளார் மதிமுக., பொதுச் செயலர் வைகோ.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். அன்புத் தங்கை கனிமொழி தூத்துக்குடியில் வெற்றி பெற்று மக்களவையில் சேவையாற்றுவார்.

ஜனநாயகமா, பாசிசமா இரண்டில் எது வெல்லும் என்ற கேள்வி இந்த தேர்தலில் எழுந்திருக்கிறது? முல்லை பெரியாறு, காவிரி நதிநீர், கஜா புயல் பாதிப்பு விசயங்களில் தமிழகத்தை கிள்ளுக்கீரையாக எண்ணும் பிரதமர் மோடியின் அரசு அகற்ற படவேண்டும்.

கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெல்வார். எனது பிரச்சாரத்தை வரும் 22-ல் தூத்துக்குடியிலிருந்து தொடங்குகிறேன் என்று கூறினார்.

 

Related articles

Recent articles

spot_img