அதிமுக., பாமக.,வை தொடர்ந்து… தேமுதிக., வேட்பாளர்கள் அறிவிப்பு!

Published:

vijayakanth 12 600 01 1504279982 - 2026

சென்னை: அதிமுக., கூட்டணியில் இடம்பெற்றுள்ள விஜயகாந்த்தின் தேமுதிக.,வுக்கு வட சென்னை,
கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில், கள்ளக்குறிச்சியில் போட்டியிட விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் விருப்பம் தெரிவித்திருக்கிறார். மற்ற தொகுதிகளில் போட்டியிட கட்சியில் பலரும் தயக்கம் காட்டுவதாகக் கூறப் படுகிறது. இதனால் தகுந்த வேட்பாளர்களைத் தேடும் பணியில் கட்சித் தலைமை இறங்கியுள்ளதாம்.

இந்நிலையில் நேற்று முற்பகல் 11 மணிக்கு கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்த தலைவர் விஜயகாந்த் சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட மாநில நிர்வாகிகளுடன் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இதை அடுத்து, தேமுதிக., போட்டியிடும் நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப் பட்டதாக, அந்தப் பட்டியல் இன்று வெளியிடப் படும் என்றும் கூறப்பட்டது.

அதன்படி தே.மு.தி.க வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப் பட்டது.

கள்ளக்குறிச்சி-சுதீஷ்
விருதுநகர்-அழகர்சாமி
வடசென்னை-மோகன்ராஜ்
திருச்சி-டாக்டர் இளங்கோவன்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

Related articles

Recent articles

spot_img