வரும் 22-ம் தேதி பிசிசிஐ தலைவர் தேர்தல்: தலைவராகிறார் தாகூர்

சற்றுமுன்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தோ்தலுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த சஷாங் மனோகர், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதற்காக அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அப்பதவிக்கு வரும் 22-ம் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து பீகார் கிரிக்கெட் சங்கம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் பி.சி.சி.ஐ தேர்தலுக்கு தடை விதிக்க கோரியது.

கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்புடையதாக ஓய்வு பெற்ற நீதிபதி லோதா கமிட்டி பரிந்தரைத்தவர்கள் போட்டியிடுவதால் தேர்தலுக்கு தடை விதிக்க பீகார் கிரிக்கெட் சங்கம் வலியுறுத்தியது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இது குறித்து ஏற்கனவே விசாரணை நடத்திய நீதிபதிகள் அமர்வை அணுக உத்தரவிட்டு பி.சி.சி.ஐ தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. இதனால் திட்டமிட்டப்படி வரும்  22-ம் தேதி பிசிசிஐ தலைவர் தேர்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது. தற்போதைய செயலாளர் அனுராக் தாகூர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.