ஒரு விமர்சனக் கருத்தையே தாங்கிக் கொள்ள முடியவில்லையே…! ஜோதிமணியை விளாசும் பாமக.,!

சற்றுமுன் தமிழகம் திருச்சி லைஃப் ஸ்டைல்

karur admk man beaten2 - 2026ஒரு கருத்து கூறியதையே தாங்கிக் கொள்ளாதவர், அந்த இளைஞர்களை தர்ம அடி கொடுத்ததோடு, அவர்கள் மீதே  பொய் புகார் கொடுக்க முற்பட்டவர் நாளை பதவிக்கு வந்தால் என்ன பொய் புகார் கொடுப்பாரோ என்று கரூரில் பா.ம.க மாநில துணை பொதுச்செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் செய்தியாளர்களிடம் பேசிய போது குறிப்பிட்டார்.

தி.மு.க வுடன் அந்த காலத்திலிருந்து தொடர்ந்து முரண்பட்டவர் தான் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி., இது மட்டுமில்லாமல்., திடீரென்று தி.மு.க வில் இணைந்த செந்தில் பாலாஜிக்கும் தி.மு.க விலும் அதிருப்தி! இந்த நிலையில் வாக்கு சேகரிக்கும் போது அடிதடி ரகளையில் வேறு ஈடுபட்டுள்ளனர். இதற்கு பாமக கடும் கண்டனம் தெரிவிக்கிறது

karur admk man beaten - 2026

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மோடி பிரதமர் ஆவது உறுதி! தமிழகத்தைப் பொறுத்தவரை, ஈழத்தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சிக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள். அதனுடன் சேர்ந்த கூட்டணிக்கும் அதே நிலைமை தான்!

ஆகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் பா.ஜ.க வுடனான அ.தி.மு.க கூட்டணி தான் மகத்தான வெற்றி பெறும்! மேலும், இந்தியாவின் அடுத்த பிரதமர் நரேந்திர மோடி தான்! ஆனால் எதிர்த்து நிற்கும் காங்கிரஸில் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி தான் என்று தமிழகத்தில் இருக்கும் தி.மு.க கட்சி மட்டுமே கூறிக்கொள்கின்றது. இந்தியாவில் பெரும்பாலும் உள்ள மற்ற கட்சிகள் ஏதும் கருத்து தெரிவிக்க வில்லை.

karur senthilbalaji jothimani - 2026கரூரில் அ.தி.மு.க கூட்டணியின் சார்பில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் ஏற்கனவே 10 வருடங்களாக இதே பகுதி மக்களுக்கு நல்ல அறிமுகமானவர், ஆனால் எதிர்த்து நிற்கும் காங்கிரஸ் வேட்பாளர் மக்களுக்கு அறிமுகமில்லாதவர்,

அவர் மக்கள் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாதவர், அதே கட்சியிலேயே அதிருப்தி! இதே போல, தி.மு.க வோடு ஆரம்ப காலத்தில் இருந்தே தொடர்ந்து முரண்பட்டவர், தி.மு.க நிர்வாகிகளும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலையில் அ.தி.மு.க வில் அமைச்சராக இருந்து விட்டு திடீரென்று தி.மு.க விற்கு சென்றதோடு, அவருக்கு மாவட்ட பொறுப்பாளர் வழங்கியது தி.மு.க வின் உண்மை விசுவாசிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இது போன்ற பல காரணங்களினால் அந்த வேட்பாளர் ஜெயிக்க முடியாது. அதே நேரத்தில் வாக்குகள் சேகரிக்கும் போது, மக்கள் அவரை கண்டித்து ஈழத்தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு ஆரத்தி கேடா ? என்று கூறிய இளைஞர்களுக்கு தர்ம அடி வழங்கியதோடு, பத்திரிக்கையாளர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்தனர்.

மேலும், அப்போதே அன்று இரவே, தன்னை கத்தியால் குத்த முற்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முற்பட்டுள்ளார். ஒரு கருத்தை கூட ஏற்க முடியவில்லை, அதற்கு ஒரு பொய் புகார் கொடுக்க முற்பட்டவர், பின்னர் பொறுப்பிற்கு வந்து விட்டால் என்ன என்ன புகார்கள் கொடுக்க இருக்கின்றாரோ ? என்றும் கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.