லயோலா கல்லூரிக்கும் கருத்துக் கணிப்புக்கும் தொடர்பில்லை! அறிக்கை வெளியிட்ட நிர்வாகம்!

சற்றுமுன் சென்னை தமிழகம்

loyola college 1 - 2026

பண்பாடு மக்கள் தொடர்பகத்தின் தேர்தல் கருத்துகணிப்பு க்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று லயோலா கல்லூரி நிர்வாகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில்…

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பாக பண்பாடு மக்கள் தொடர்பகம் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மாநிலம் முழுவதும் கள ஆய்வு நடத்தி இறுதி முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது

2019 நாடாளுமன்ற தேர்தல் 40 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்ற தலைப்பில் பண்பாடு மக்கள் தொடர்பகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை எமது நிர்வாகத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும் நடப்பு தேர்தல் மூலம் பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு யாருக்கு என்பது தொடர்பான அந்த ஆய்வறிக்கை க்கும் எமது நிர்வாகத்துக்கும் தொடர்பு இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்

கடந்த சில தேர்தல் தொடர்பாக எமது நிர்வாகம் சார்பில் எவ்வித கருத்து கணிப்பும் ஆய்வறிக்கைகளும் வெளியிட வில்லை என்பதை சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை இது போன்ற தேர்தல் கருத்துக் கணிப்புகள் மற்றும் ஆய்வறிக்கைகளை வெளியிட நீங்கள் நிர்வாகத்தில் எந்தத் துறையிலும் தற்போது இல்லை என்பதை உறுதி அளிக்கிறோம்

இதுபோன்ற கருத்துக்கணிப்புகளை லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு என்று ஊடகங்களில் செய்திகள் வெளியிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று விரும்புகிறோம் – என்று லயோலா கல்லூரியின் முதல்வர் loyola denied - 2026அறிக்கையை வெளியிட்டுள்ளார்!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.