ஒரு பேண்டு சட்டை கூட இல்லாம லண்டனிலேயே இருப்பவரை சிவகங்கையில் பார்க்க முடியுமா?!

Published:

karthicidambaram - 2026

சிதம்பரம் மகன் கார்த்தியை மக்கள் பார்க்கவே முடியாது என மானாமதுரையில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது நடிகை சரஸ்வதி கூறினார்.

அமமுக. வேட்பாளர் மாரியப்பன் கென்னடியை ஆதரித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான சி.ஆர்.சரஸ்வதி பேசியபோது…

சிவகங்கை தொகுதியைச் சேர்ந்த சாதாரண சராசரி மக்கள் ப.சிதம்பரத்தையே பார்க்க முடியாத போது அவரது மகன் கார்த்தி லண்டனிலேயே இருப்பவர், அங்கே சொத்து சேர்ப்பவர், அவர் இங்கு காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார், அவர் வெற்றி பெற்றால் மக்கள் எப்படி அவரை சந்திக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

முன்னதாக, போட்டுக்கொள்ள தனக்கு ஒரு பேண்டு சட்டை கூட சிவகங்கையில் இல்லை என்று கூறி! கார்த்தி சிதம்பரம் அதிர்ச்சி அளித்திருந்தார்.

செட்டி நாட்டு இளவரசர் என்று காங்கிரஸ் தொண்டர்களால் அழைக்கப்படும், சிவகங்கை வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், தான் அணிந்து கொள்ள ஒரு பேண்ட்- சட்டை கூட சிவகங்கையில் இல்லை என்று மாணவர்கள் மத்தியில் கூறி அதிரவைத்தார்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

சென்னையில் கல்லூரி மாணவிகளோடு ராகுல்காந்தி உரையாடி மக்கள் கவனத்தை கவர யோசித்தது போல் தானும் உரையாடி மக்கள் கவனத்தை ஈர்க்கும் முயற்சியுடன் கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து மாணவ மாணவிகளை அழைத்து வந்து கலந்துரையாடினார்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை சுட்டிக் காட்டிய ஒரு மாணவி, நீங்கள் வெற்றி பெற்றால் பெண்கள் பாதுகாப்புக்கு என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு கார்த்தி, இதையெல்லாம் சட்டம் போட்டுத் திருத்த முடியாது பெற்றோர் நினைத்தால் மட்டுமே குற்றங்கள் குறையும் என்றார்.

முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு பேண்ட் சட்டையில் வந்திருக்க வேண்டும் என்று கூறிய கார்த்தி சிதம்பரம், சிவகங்கையில் தனக்கு பேண்ட் சட்டை ஏதும் இல்லை என்றும், எல்லாம் சென்னையில் இருப்பதால் வேட்டி சட்டையுடன் சந்திக்க வந்திருப்பதாகவும் கூறினார்.

இப்போதே இப்படி ..! ஜெயித்தால் தொகுதி பக்கம் வருவாரா? இல்லை சென்னையிலேயே இருப்பாரா என்ற கேள்வியுடன் மாணவர்கள் வெளியேறினர்.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

Related articles

Recent articles

spot_img