இடைத்தேர்தல் வாக்குப்பதிவு: அரவக்குறிச்சி… ஒரு ரவுண்டப்!

சற்றுமுன் திருச்சி

vote1 - 2026

அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் நாளை (19-ந்தேதி) நடக்கிறது.

நாளை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது.

அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் செந்தில்நாதன், தி.மு.க. சார்பில் செந்தில்பாலாஜி, அ.ம.மு.க. சார்பில் சாகுல் அமீது, மக்கள் நீதிமய்யம் சார்பில் மோகன்ராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் செல்வம் போட்டியிடுகிறார்கள்.

இங்கு ஆண்கள் 99,052 பேரும், பெண்கள் 1,06,219 பேரும், இதர வாக்காளர்கள் 2 என மொத்தம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 273 வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி முழுவதும் 159 இடங்களில் 250 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் 29 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக அறிவிக்கப் பட்டுள்ளன. அங்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அரவக்குறிச்சி தொகுதியில் 63 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்கு எண்ணும் மையத்தில் 4 பேலட் யூனிட்டுகள் (பொத்தானை அழுத்தி வாக்கு செலுத்தும் எந்திரம்), ஒரு கண்ட்ரோல் யூனிட் (வாக்குப் பதிவினை கட்டுக்குள் வைத்திருக் கும் எந்திரம்), யாருக்கு வாக்களித்  தோம் என்பதை அறியும் வகையிலான விவிபேட் எந்திரம் ஆகியவை பயன்படுத்தப்பட உள்ளன.

இதற்காக 1199 பேலட் யூனிட்டுகள், 295 கண்ட்ரோல் யூனிட்டுகள், 313 விவிபேட் எந்திரங்கள் தயார் நிலையில் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இவை இன்று மதியத்திற்கு மேல் வாக்குச்சாவடி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. 1200-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி வந்து வாக்களிக்கும் வகையில் அவர்களுக்கு சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் உள்ளன.

4 கம்பெனிகளை சேர்ந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார் 320 பேர் தேர்தல் பணிக்காக வந்துள்ளனர். துணை ராணுவத் தினர், உள்ளூர் போலீசார் 700-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.