காசே வாங்காம திமுக., கூட்டணிக்கு வாக்குகளை வாரிக் கொட்டியுள்ளனர்: திருநாவுக்கரசர்!

Published:

05 May15 thirunavu - 2026

தமிழக மக்கள் ஒரு பைசா கூட வாங்காமல் திமுக கூட்டணிக்கு வாக்குகளை வாரி வழங்கியுள்ளனர் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர்  திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் வாக்கை அள்ளிக் கொட்டியுள்ளனர். ஒரு பைசா கூட வாங்காமல் மக்கள் அளித்துள்ள ஆதரவுக்கும், வெற்றிக்கு உழைத்த திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினருக்கும் நன்றி என முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

மத்தியில் ராகுல் காந்தி பிரதமராக இப்போதும் வாய்ப்புள்ளது, அவருக்கு இன்னும் வயதுள்ளது என அவர் கூறினார்.

முன்னதாக, இன்று காலை முதலே தேசிய அளவில் பாஜக., கூட்டணி அதிக அளவிலான இடங்களில் முன்னிலை பெற்று வந்தது. அதே நேரம், தமிழ்நாட்டில் மட்டும், திமுக., கூட்டணி முன்னிலை பெற்று வந்தது. தமிழகத்தில் திமுக., காங் கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

Related articles

Recent articles

spot_img