லாட்ஜ்ல ரூம் போட அடையாள அட்டை கேட்டா… மோடியா காரணம்! பெண் மீது புகார்!

Published:

cyber crime complaint - 2026

வேளாங்கண்ணியில் லாட்ஜில் ரூம் எடுத்து தங்குவதற்கு பாதுகாப்பு காரணம் கருதி லாட்ஜ் நிர்வாகம் அடையாள அட்டை கேட்டதற்காக வேளாங்கண்ணியில் வைத்து சித்ரா ரேவதி (CHITRAREVATHY) என்பவர் பாரத பிரதமர் மோடியை தரக்குறைவாக ஒருமையில் பேசி இந்திய அரசுக்கு எதிராக மக்களிடையே அவதூறான செய்திகளை டிக்டாக் செயலி மூலம் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை மத்திய அரசு வழக்கறிஞர் கா.குற்றாலநாதன் காவல்துறையில் ஆன்லைன் மூலம் புகார் செய்துள்ளார்!

வேளாங்கண்ணிக்கு வந்த தாங்கள் தங்குவதற்கு அறை கேட்டபோது, அடையாள அட்டை கேட்டதாகவும், கடந்த வருடம் வந்த போது அவ்வாறெல்லாம் கேட்கவில்லை என்றும், இரண்டு நாள் தானே வந்திருக்க.. அதுக்குள்ள என்ன புதுசு புதுசா ரூல்ஸ் போடுற என்றும் பிரதமரை ஒருமையில் திட்டியும் சித்ராரேவதி என்ற பெண், டிக்டேக் செயலியில் வீடியோ பதிவு செய்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி இலங்கையில் கிறிஸ்துவ சர்ச்சுகளைக் குறிவைத்து இஸ்லாமிய மத பயங்கரவாதிகள் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர் என்பதும், அதனை அடுத்து இந்தியாவிலும் வேளாங்கண்ணி உள்ளிட்ட சர்ச்சுகளில் பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டது என்பதும் செய்தி.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தொடர்ந்து, இவ்வாறு தலங்களுக்கு சுற்றுலா வருபவர்கள் தங்குவதற்கு எந்த இடத்திலும் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டை கேட்டுப் பெறுவதும், வந்து தங்குபவர் அடையாளங்களைப் பதிவு செய்வதும் பாதுகாப்பு நடைமுறை என்பதை மறைத்து, வேண்டுமென்றே பிரதமர் மோடி குறித்து அவதூறு பதிவு செய்வதாகவும் கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இந்நிலையில், இந்தப் பெண் மீது புகார் மனு பதிவு செய்துள்ளார் வழக்கறிஞர் கா.குற்றாலநாதன்.

அந்தப் பெண் வைரலாக்கிய வீடியோ பதிவு…

Related articles

Recent articles

spot_img