கணவன் மனைவி உறவு போன்றது..! ஓபிஎஸ்., ஈபிஎஸ்., பற்றி திண்டுக்கல் சீனிவாசன் ’வெளக்கம்’!

சற்றுமுன் தமிழகம் மதுரை லைஃப் ஸ்டைல்

dindukkal seenivasan interview - 2026

திண்டுக்கல்: அதிமுகவில் எந்த பிரச்சனையும் கிடையாது! எந்த விஷயத்தை பேசினாலும் கணவன் மனைவி உறவு போல் எங்கு வைத்து பேச வேண்டுமோ அங்கு வைத்து தான் பேச வேண்டும் என்று திண்டுக்கல்லில் தமிழக வனத்துறை அமைச்சர் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறினார்.

திண்டுக்கல் ஜி எஸ் நகரில் 30 லட்சம் செலவில் பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தை தமிழக வனத்துறை அமைச்சர் சீனிவாசன் திறந்து வைத்து செய்தியாளரிடம் பேசினார் திண்டுக்கல் சீனிவாசன். அப்போது அவர்,  அதிமுகவில் எந்த பிரச்சனையும் கிடையாது! எந்த விஷயத்தைப் பேசினாலும் கணவன் மனைவி உறவு போல் எங்கு வைத்துப் பேச வேண்டுமோ அங்கு வைத்துத் தான் பேச வேண்டும்!

கட்சியும் ஆட்சியும் முதலமைச்சர் துணை முதலமைச்சர் ஒருங்கிணைப்பாளர் துணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது எந்த குழப்பமும் கிடையாது! இது கணவன் மனைவி உறவை போன்றது!

அதிமுகவை பொறுத்தவரை எந்த பிரச்சினையும் கிடையாது சிறப்பாக செயல்பட்டு வருகிறது தமிழக அமைச்சர்கள் எல்லோரும் முழுமனதோடு ஆர்வத்தோடு சிறப்பாக செயல்பட்டு வருகிறோம் அவர் யாரை சொல்கிறார் என்பது எங்களுக்குத் தெரியாது தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியை வலுப்படுத்துவது மக்களுக்கு வேலை செய்வது தொடர்பாக ஆலோசனை செய்து நல்ல விதமாக செய்து கொண்டிருக்கின்றோம்

நாடாளுமன்றத்திற்கு மக்கள் ஒரு தீர்ப்பும் சட்டமன்றத்திற்கு ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளனர் தமிழ்நாட்டை நாங்கள் ஆள வேண்டும் என்பதற்காக ஒன்பது இடங்களில் மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்

இதுதான் மக்களுடைய தீர்ப்பு இது எங்களுக்கு நல்ல படிப்பினை கொடுத்துள்ளது மக்களின் மனதில் இடம் பிடித்து என்ன செய்ய வேண்டுமோ அதனை சிறப்பாக செய்வோம்

பொய்யான வாக்குறுதி செய்ய முடியாததை சொல்லி மக்களை திசைதிருப்பி மக்களை ஏமாற்றி தான் திமுக மற்றும் காங்கிரஸ் வாக்குகளை பெற்றுள்ளது

திமுக பெற்றுள்ளது உண்மையான வெற்றி அல்ல தமிழ்நாட்டைத் தவிர இந்தியா முழுவதும் மக்கள் மோடியை தேர்ந்தெடுத்துள்ளனர் இந்தச் சூழ்நிலையில் இங்கு பொய்க்கு ஓட்டு கிடைத்துள்ளது

இந்த மாயை விரைவில் மறைந்துவிடும்! வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் மக்களை சந்தித்து நல்ல தீர்ப்பை பெறுவோம் – என தெரிவித்தார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.