imd cyclone - 2026

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இது புயலாக மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்தத் தாழ்வு நிலை, அடுத்த 48 மணிநேரத்தில் தென்கிழக்கு, கிழக்கு மத்திய பகுதிகளில் நகர்ந்து வருகிறது.

இது மேலும் வடக்கு மற்றும் வடமேற்கு அரபிக்கடல் பகுதியில் நகர்ந்து புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது.

அரபிக்கடலில் உருவாகியுள்ள இந்தப் புதிய புயல் சின்னத்தால், கடலோர கர்நாடகா, கோவா, அசாம், மேகாலயா மற்றும் திரிபுராவில் அடுத்த 3 தினங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதனால், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட  மாநிலங்களில் வெயிலின் தாக்கம் குறையும்!

தற்போது, தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் லட்சத்தீவு, கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது…என்று இந்திய வானிலை மையத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending