முக்கியத்துவம் வாய்ந்த குரூப்-1 தேர்வில் குளறுபடிகளை அனுமதிக்க முடியாது!

12 Aug 05 High court - 2026

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த குரூப்-1 தேர்வில் குளறுபடிகள் நடப்பதை அனுமதிக்க முடியாது என்று டிஎன்பிஎஸ்சிக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 24 கேள்விகள் தவறானது என்று உயர் நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி ஒப்புக் கொண்டதை அடுத்து, இத்தகைய கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது உயர் நீதிமன்றம்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி ஒப்புக் கொண்டது.  கேள்வித்தாள் குளறுபடி, வெளிப்படைத்தன்மை இன்மை ஆகிய காரணங்களால் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வை ரத்து செய்யக் கோரி விக்னேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் பங்கேற்ற குரூப் 1 தேர்வின் முடிவுகள் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், 9 ஆயிரத்து 50 பேர் முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். மேலும் தேர்வானவர்களின் பெயர், பாலினம், பிரிவு என எவ்வித தகவலும் வெளியிடப்படாத நிலையில், கட் – ஆஃப் மதிப்பெண்ணும் வெளியிடப்படாததால் தேர்வு வெளிப்படைத்தன்மை இன்றி நடத்தப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டி இருந்தார்.

ALSO READ:  நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

மேலும், குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 18 கேள்விகள் தவறானவை என்றும், அவற்றை மறுமதிப்பீடு செய்யாமல் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என்று டி.என்.பி.எஸ்.சியிடம் தாம் கோரியதாகவும், ஆனால் அதனை ஏற்காமல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதாகவும் அந்த மனுவில் முறையிட்டுள்ளார்.

எனவே தேர்வு முடிவுகளை ரத்து செய்து, மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் 1 தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

விக்னேஷ் தாக்கல் செய்த மனு இன்று உயர் நீதிமன்ற நீதிபதி பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை  விசாரித்த நீதிபதி பார்த்திபன், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த கேள்வித்தாளில் அரசியலமைப்பு பாடப்பிரிவில் கேட்கப்பட்டிருந்த கேள்வி ஒன்றை சுட்டிக்காட்டி, இந்தக் கேள்விக்கு எனக்கே பதில் தெரியவில்லை என்றார்.

மேலும், இந்த ஒரு கேள்வியே மனுதாரரின் குற்றச் சாட்டுக்கு போதுமானதாக உள்ளது என்றார்.

அப்போது டி.என்.பி.எஸ்.சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என ஒப்புக்கொண்டார். தொடர்ந்து, வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் தேவை என்று  வேண்டுகோள் விடுத்தார்.

ALSO READ:  ‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆனால், டிஎன்பிஎஸ்சியின் இந்த ஒப்புதல் விளக்கத்துக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த குரூப் -1 தேர்வில் இது போன்ற குளறுபடிகள் நடப்பதை அனுமதிக்க முடியாது எனக் கூறினார்.

இந்த விவகாரத்தில் நீதிமன்றம் மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கும் என்று தெரிவித்த நீதிபதி, ஜூன் 17 ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories