விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., ராதாமணி காலமானார்!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

VIKRAVANDI radhamani - 2026

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணி (வயது 69) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

விக்கிரவாண்டி எம்எல்ஏ ராதாமணி புற்றுநோயால் உடல் நலம் பாதிக்கப் பட்ட நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

விக்கிரவாண்டி தொகுதியில் 2016ல் திமுக., சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர். எம்.ஏ., படித்தவர்

விழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாமணி. இவர் திமுக மாவட்ட அவைத்தலைவராகவும் உள்ளார்.

தொடர்பு எண்: 9443439356

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.