உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு அடுத்த மாதமே வெளியாகும்!?

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

tn election commission - 2026

மாநில தேர்தல் ஆணையரின் ஆய்வுப் பணிகள் முடிந்ததும் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு அடுத்த மாதமே, அதாவது ஜூலையிலேயே வெளியாக உள்ளது என்று கூறப் படுகிறது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்காக மாநிலம் முழுவதும் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் பணியை மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தொடங்கியுள்ளார்.

இதன் முதல் கூட்டம் கோவையில் நடத்தி முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாவட்ட வாரியாகவும் மண்டல வாரியாகவும் இனி அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.

இந்தக் கூட்டங்களில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குச் சீட்டுகள், தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள், தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட உள்ளது.

இந்த ஆய்வுக் கூட்டங்கள் அடுத்த மாதம் முதல் வாரத்துக்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதை அடுத்து உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.