கோவையில் என்.ஐ.ஏ.,வால் கைதான 3 பேருக்கு சிமி தொடர்பு!

Published:

nia office - 2026

கோவையில் கைதான 3 பேருக்கு சிமி இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தடை செய்யப்பட்ட சிமி இயக்கம் குறித்து கர்நாடக போலீசார் இன்று அபிடவிட் தாக்கல் செய்து வாதிட்டனர். 2வது நாளான இன்று காலையில் கர்நாடக மாநில போலீசார் அங்கு நடந்த சில குண்டுவெடிப்புகள் அதில், சிமி தொடர்புகள் குறித்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தனர். சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞர் பிங்கி ஆனந்த் தனது வாதத்தை முன்வைத்தார். நாளை 3வது நாள் இந்த விசாரணை முடிவடைய உள்ளது.

கோவையில் அண்மையில் பிடிபட்ட நபர்களுக்கு தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீர்ப்பாய விசாரணையின்போது சாட்சியம் அளித்துள்ளனர்

நாட்டில் நாச வேலைகளில் ஈடுபட்ட சிமி என்ற இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு 2001இல் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. இந்தத் தடை உத்தரவை நீடிப்பது தொடர்பான தீர்ப்பாய விசாரணை நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று காலை 10 மணிக்கு தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் தொடங்கியது

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

சிமி மீதான தடையை நீட்டிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் சார்பில் குண்டூரை சேர்ந்த வழக்கறிஞர் சந்திரசேகர் மனுத்தாக்கல் செய்திருந்தார்!

மத்திய அரசு தரப்பில் ஆஜரான தில்லி உயர்நீதிமன்ற அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பிங்கி ஆனந்த் இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது…

நாடு முழுவதும் தீர்ப்பாயம் சார்பில் சிறப்பு அமர்வுகள் நடத்தப்பட்டு சாட்சிகள் சேகரிக்கப்படுகின்றன! கோவை மண்டலத்திற்கான அமர்வு இங்கே தொடங்கியுள்ளது, கோவையில் அண்மையில் பிடிபட்ட நபர்களுக்கு சினி இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக ஆதாரங்களுடன் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சாட்சியம் அளித்தனர்

மேலும் இந்த அமர்வில் குஜராத்தின் ஆமதாபாத் சூரத் நகரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக இரு சாட்சியங்களும் பீகாரில் இருந்து சாட்சியங்களும் அளிக்கப்பட்டுள்ளன என்று கூறினார் தீர்ப்பாய அமர்வுக்கு கர்நாடகா கேரளா குஜராத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் எஸ்பி ஆகியோர்கள் வந்திருந்தனர்

தீர்ப்பாய அமர்வு இன்றும் நாளையும் தொடர்ந்து நடைபெறுகிறது கோவையில் என்னையே அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இருவரின் 5 நாள் custody நிறைவடைந்து

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

மீண்டும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தற்கொலைப்படை தாக்குதல் பயங்கரவாதி கோவையைச் சேர்ந்த சிலர் தொடர்பில் இருந்தது தெரியவந்தது

அடுத்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு முகமது அசாருதீன் ஷேக் அப்துல்லா என்ற இருவரை கைது செய்தனர்! கேரளா சிறையில் அடைக்கப்பட்ட இருவரையும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் 5 நாட்கள் கஸ்டடியில் எடுத்தனர்

இதன் தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு முன்னர் குனியமுத்தூர் வந்த என்.ஐ.ஏ., அதிகாரிகள் முகமது அசாருதீன் என்பவரின் நண்பரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்!

அதில் இரண்டு ஹார்டு டிஸ்குகள் பறிமுதல் செய்து நடத்திய விசாரணை நடத்துகின்றனர். பின்னர் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களைப் பெற்றனர்

இதற்கிடையே இருவரது 5 நாள் கஸ்டடி நேற்று நிறைவடைந்தது! இருவரும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் கேரளா சிறையில் அடைக்கப்பட்டனர்!

Related articles

Recent articles

spot_img