திமுக., ஆக்கிரமித்ததெல்லாம் தில்லிக்காரங்களுக்கு தெரியாதுன்னு அங்கே போய் விவாதமா?!

Published:

hraja - 2026

திமுக.,வினர் ஆக்கிரமித்து கட்டியதெல்லாம் தில்லியில் இருப்பவர்களுக்குத் தெரியாது என்பதால் அங்கே போய் விவாதிக்கிறார்களா? என்று பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்து மக்களவையில் விவாதிக்க திமுக., தரப்பில் இருந்து நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸை மக்களவை செயலகத்தில் திமுக., மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வழங்கியுள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா… ‘வள்ளுவர் கோட்டம், மதுரை உயர்நீதிமன்ற கட்டிடம், தாலுகா அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பஸ் நிலையம் எல்லாம் ஏரிகளை ஆக்கிரமித்து கட்டியதால் தண்ணீர் பற்றாக்குறை என்று டெல்லியில் உள்ளவர்களுக்கு தெரியாது என்பதால் அங்கு விவாதமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏற்கெனவே, தமிழகத்தில் திமுக.,வினர் தண்ணீர் பிரச்னைக்காகப் போடும் நாடகம் குறித்து தனது டிவிட்டர் பதிவுகளில் கேள்வி எழுப்பி வந்தார்.

இந்நிலையில், ஹெச்.ராஜாவின் இன்றைய டிவீட் விவாதத்தை கிளப்பியுள்ளது.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

Related articles

Recent articles

spot_img