ஏமாற்றும் குற்றால அருவி! பாலருவிக்குப் படையெடுக்கும் பயணிகள்!

சற்றுமுன் சுற்றுலா நெல்லை லைஃப் ஸ்டைல்

courtallam july14 - 2026

குற்றால அருவிகள் ஏமாற்றி வருவதால், கேரள மாநிலத்தில் உள்ள பாலருவிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டம், திருக்குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து குறைந்து வருகிறது. மெயின் அருவியில் சிறிதளவே தண்ணீர் விழுகிறது. பெண்கள் குளிக்கும் பகுதியில் தண்ணீர் முழுவதுமாக நின்று போனது. இதனால், பெண்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பாறையை ஒட்டி விழும் சிறிதளவு நீரில் குளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்து தலை காட்டிச் செல்கின்றனர்.

இந்நிலையில், செங்கோட்டையை அடுத்து,  சுமார் 16 கி.மீ., தொலைவில் கேரள மாநிலம் ஆரியங்காவு வனப் பகுதியில் உள்ள பாலருவியில் குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் பெருமளவு படையெடுத்து செல்கின்றனர்.

பாலருவியில் ஓரளவு தண்ணீர் விழுகிறது. அதே நேரம், பாதுகாப்பு குறைவு என்பதால் பயணியருக்கு அச்சம் உள்ளது. குற்றால அருவிகளைப் போல் பாதுகாப்பாக நின்று குளிக்க இயலாமல், தடாகத்தினுள் இறங்கி, பாறையை ஒட்டி விழும் அருவி நீரில் குளிக்கலாம். இது பெண்களுக்கு மிகவும் சிரமம் என்பதால், பெண்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை.

[su_gmap width=”700″ height=”500″ address=”Palaruvi”]

மேலும், பாலருவியில் செல்ல காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரைதான் அனுமதி என்பதும், ஒருவருக்கு உள்ளே செல்ல ரூ.50 கட்டணம் என்பதும் பாலருவிக்கு பயணிகள் செல்வதில் சில தயக்கங்களை ஏற்படுத்துகிறது. முழுவதும் கேரள வனப்பகுதிக்குள் சென்று குளிக்க வேண்டியிருப்பதால், அவர்களின் அனுமதி தேவைப்படுகிறது.

இருப்பினும், பாலருவியில் சென்று குளிப்பதில் ஆண்கள் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், வழக்கத்தை விட அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் பாலருவிக்குச் சென்ற வண்ணம் இருந்தனர்.

பாலருவியில் குளித்து மகிழும் பயணிகள்… காணொளி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.