திண்டுக்கல் கலெக்டரிடம் மனு !வெளிநாட்டில் வேலை என பணம் பறிப்பு !

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்

 

singapur e1563343451536 - 2026திண்டுக்கல் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. திண்டுக்கல் சித்தையன்கோட்டையை சேர்ந்த10 பேர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்கள்.

அந்த புகார் மனுவில், எங்கள் ஊரை சேர்ந்த 10 நபரிகளிடம் பக்கத்துக்கு ஊரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தொடர்பு கொண்டு சிங்கப்பூரில் வேலைவாங்கி தருவதாக கூறினார். எங்களிடம் 85 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 10 லட்சம் வரை  பெற்றுக் கொண்டார்.

அவர் எங்களிடம் இருந்து பணத்தை பெற்ற பிறகு எங்களுக்கு எந்த வித வேலைப் பற்றிய அறிவிப்பும் தரவில்லை.மூன்று மாதங்கள் கழித்து கேட்டபோது, எங்களுக்கு சரியான பதிலை அளிக்காமல் ஏதேதோ கூறினார். நாங்கள் அனைவரும் கூலிவேலை செய்து வந்தநிலையில் பைனாஸ்சியரிடம் அதிக வட்டிக்கு பணம் வாங்கி கொடுத்தோம். பணம் கொடுத்தவர்கள் பணம் கேட்டு விரட்டுகின்றனர்.

வேலை இல்லையென்றால் பணத்தை தருமாறு மணிகண்டனிடம் கேட்டால், அவர் எங்களை ஆள் வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். காவல்துறையில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை, எனவே எங்களுக்கு தீர்வு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இது தொடர்பாக காவல்துறையை நடவடிக்கை எடுக்க கோர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.