வரும் 19ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணிக்கான தேர்தல், தொழிற்நுட்ப காரணங்களால் மே 31ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் சிறப்பு பொதுக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதை இலங்கை விளையாட்டு திரை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரிய தேர்தலில் தற்போது தலைவராக உள்ள திலங்க சுமதிபாலா இரண்டாவது முறையாக போட்டியிடுவார் என்று தெரிகிறது.



