இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரோலண்ட் ஓல்ட்மான்ஸ் கடந்த ஆண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து, இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பயிற்சியாளரான ஜியார்டு மரிஜ்னே ஆடவர் அணிக்கும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 12 ஆண்டுகளில் இந்திய அணி பதக்கம் வெல்லாமல் இருந்ததே இல்லை. இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்திய ஆடவர் அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இது குறித்து ஹாக்கி சங்கம் சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் பயிற்சியாளரை மாற்றுவது குறித்து முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், டெல்லியை சேர்ந்த ஹரேந்திர சிங் இந்திய ஆடவர் அணிக்கு புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹரேந்திர சிங் 2016-ம் ஆண்டு இந்திய ஜூனியர் ஹாக்கி அணி உலகக்கோப்பை பெற காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



