சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் உடல் இன்று அடக்கம்

சற்றுமுன் தமிழகம் நெல்லை

saravana bhavan owner court rajagopal - 2026

சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலின் உடல் திருச்செந்தூர் அருகே உள்ள அவரது சொந்த ஊரில் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.

சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ராஜகோபால், நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 9ஆம் தேதி ஆம்புலன்சில் வந்து சரணடைந்தார். அவருக்கு உடல்நிலை பாதிப்பு அதிகமாக இருந்ததை தொடர்ந்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தமது தந்தையை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரி, அவரது மகன் அளித்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து, அவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, நேற்று உயிரிழந்தார்.

இதனிடையே, ராஜகோபாலின் உடல், திருச்செந்தூர் அருகே உள்ள அவரது சொந்த ஊரான வனத்திருப்பதியில் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது. புன்னைநகரில் உள்ள ராஜகோபாலுக்கு சொந்தமான தோட்டத்தில் உடல் அடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.