370 பிரிவு நீக்கம்! நெல்லை சட்டக்கல்லூரி முன்பு ஏபிவிபி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

சற்றுமுன் தமிழகம் நெல்லை லைஃப் ஸ்டைல்

abvp lawcollege - 2026

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவு நீக்கப் பட்டதற்கு வரவேற்பு தெரிவித்து நெல்லை சட்டக்கல்லூரி முன்பு ஏபிவிபி.,யினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

திருநெல்வேலி சட்டக்கல்லூரி முன்பு, அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் சார்பில் காஷ்மீர் 370வது பிரிவு, மற்றும் 35 ஏ சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை வரவேற்று பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப் பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சட்டக்கல்லூரி பொறுப்பாளர் ஸ்ரீதர், மாநகர இணைச்செயலாளர் தம்புராட்டி, வள்ளி கணேஷ், வெங்கடேஷ், மந்திர மூர்த்தி, மண்டல அமைப்பு செயலாளர் பிருத்திவி ராஜன் உள்ளிட்ட மாணவர் அமைப்புத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.