இதுதான் இந்தோனேஷியா! பாடம் படிக்குமா இந்தியா!?

உரத்த சிந்தனை லைஃப் ஸ்டைல்
indonesia rupees - 2026

இந்தியாவில் நாம் புழங்கும் மதச்சார்பு வார்த்தையை குப்பைத் தொட்டியில் கிடாசிவிட்டு, பெரியாரிச முகமூடியை அடுப்புக்குள் எறிந்துவிட்டு இதைப் பார்க்க வேண்டும். இந்தோனேஷிய நாட்டின் ரூபாய்… அதிக மதிப்புள்ள இதன் ஓரத்தில் கருடன் பறக்கிறார்… விநாயகர் சிரிக்கிறார்…

இதுதான் இந்தோனேஷியா. நாடு இசுலாமிய மயமாகியிருந்தாலும், கலாசாரத்தால், கடாரம் வென்ற ராஜேந்திர சோழனின் தமிழர் கலாசாரத்தை பரம்பரை பரம்பரையாக வழிவழியாகக் கடைப்பிடித்து, தமிழர்களின் வாழ்வியல் நெறிகளில் இரண்டறக் கலந்திருந்த தெய்வசிந்தனைகளின் அடையாளமாய்த் திகழ்ந்த விநாயகர், கருடன் ஆகியவற்றை ரூபாய் நோட்டுகளில் பதிந்து வைத்துள்ளது.

இன்று இத்தகைய கருத்தைத்தான் சுப்பிரமணிய சுவாமியும் பதிவு செய்துள்ளார். இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தைப் போல் லட்சுமியின் படத்தை அச்சிட வேண்டும் என்று!

indonesia rupeesq - 2026

லட்சுமியின் படத்தை பட்டாசுகளில் அச்சிட்டு, அவமானத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சிவகாசி பட்டாசுக் காரர்களை எவரும் கண்டிக்கவில்லை! ஆனால், லட்சுமியின் படத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சிட வேண்டும் என்று கருத்து தெரிவித்த சு.சுவாமியின் கருத்தை கண்டிக்கும் சிலருக்கு இந்தோனேஷியா வழிகாட்டுகிறது.

லட்சுமி குபேர பூஜை என்பது, சமயம் கடந்து, இந்தியர்களால் கலாசார ரீதியாக கடைப்பிடிக்கப் படுவது. இதற்கு ஏதும் எதிர்ப்பு எழுமானால், இந்தியாவை இந்து நாடு என்று அறிவிக்க வேண்டும் என்ற போராட்டத்தை உண்மையான இந்தியர்கள் கையிலெடுக்க வேண்டும்.!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.