போக்குவரத்து தொழிலாளர்க்கு வரங்களை அள்ளி வீசிய தெலங்கானா முதல்வர்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
kcr meet - 2026

ஹைதராபாத்: தெலங்காணா ஆர் டி சி தொழிலாளர்களுக்கு முதல்வர் கே.சந்திரசேகர ராவ் வரங்களை அள்ளி வீசியுள்ளார்.

ஆர்டிசி தொழிலாளர்களின் பதவி ஓய்வு வயதை 60 க்கு உயர்த்தினார். 52 நாட்கள் வேலை நிறுத்த போராட்ட காலத்திற்குக் கூட சம்பளம் கொடுக்கப்படும் என்றார். செப்டம்பர் மாத சம்பளம் திங்களன்று தருவோம் என்றார்.

52 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்திய ஆர்டிசி தொழிலாளர்களை நிபந்தனையின்றி வேலையில் சேர்த்துக் கொண்டதோடு ஞாயிறு இன்று மதியம் அவர்களோடு சேர்ந்து விருந்து உண்டார். பின் அவர்களோடு சேர்ந்து ஆர்டிசி நிர்வாகத்தின் பிரச்னைகளைப் பற்றி விவாதித்தார்.

பிரகதி பவனில் நடந்த கூட்டத்தில் ஆர்டிசி நிர்வாகத்தில் லாபம் காட்டினால் சிங்கரேணி போல் போனஸ் தருவதாக தெரிவித்தார்.

பெண் ஊழியர்களின் பிரச்னையை தீர்க்க முயற்சி எடுப்போம் என்றார். இரவு 8 மணிக்கே பெண் ஊழியர்களுக்கு வேலை முடிவதுபோல் பணி அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ALSO READ:  இமயமலையில் சீனக் கட்டுமானங்களே வெள்ளத்திற்குக் காரணமா?

அரசு ஊழியர்களை போலவே பிரசவ விடுப்பு அளிப்பதற்கு அங்கீகாரம் தெரிவித்தார். அதேபோல் தொழிலாளர்களின் பெற்றோர்களுக்கு மருத்துவ உதவி செய்ய உத்தரவிடுவதாக கூறினார்.

ஆர்டிசி பிரச்சினைகள் மற்றும் சூழ்நிலை பற்றி அரசு தரப்பில் முதல்வர் கேசிஆரே பவர் பாயின்ட் பிரசெண்டேஷன் அளித்ததாக தெரிகிறது. யூனியனின் பக்கம் செல்ல வேண்டாம் என்று அவர்களை முதல்வர் கேட்டுக்கொண்டார்.

ஒவ்வொரு டிப்போவில் இருந்தும் ஐந்து பேர் வீதம் 90 டிப்போக்களில் இருந்து 750 பேர் தொழிலாளர்கள் 150 பேர் அதிகாரிகளோடு சிஎம் கேசிஆர் பிரகதி பவனில் உரையாடினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.