“அரசியல்வாதிகளுக்கு இடமில்லை! எங்க வீட்டுக்கு யாரும் வராதீங்க!” பிரியங்காவின் பெற்றோர் கண்ணீர்!

Published:

priyanka house - 2026

பாசத்தோடு பெற்று வளர்த்த பெண்ணை காமுகர்களான மனித மிருகங்களுக்கு பலி கொடுத்துவிட்டு ஆற்றாது வருந்தும் அந்தப் பெற்றோர் தங்கள் பக்கத்து இழப்பை இன்னும் முழுமையாக ஜீரணித்துக் கொள்ள இயலாமல் கண்ணீர் உகுக்கின்றனர்.

மகள் பட்ட துன்பத்தை நினைத்து நினைத்து நொந்து போகின்றனர். ஆனால் ஆறுதல் கூறுவதாகக் கூறிக் கொண்டு பல தலைவர்கள் வருகையால் அவர்கள் மேலும் மன வேதனைக்கு ஆளாகிறார்கள்.

மரணித்த தம் பெண்ணை யாரும் திரும்ப உயிரோடு பிழைக்கச் செய்யப் போவதில்லை. தயவு செய்து விசாரிக்க யாரும் வரவேண்டாம் என்று பிரியங்காவின் பெற்றோர்… அரசியல் தலைவர்கள், போலீசார், மீடியா பிரதிநிதிகளுக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.

இரண்டு நாட்களாக பல தலைவர்கள் பிரியங்காவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்கள்.

protests - 2026

எங்களுக்கு உங்கள் அனுதாபம் தேவையில்லை என்று கூறி உள் பக்கமாக கேட்டை பூட்டு போட்டுவிட்டார்கள். தம் மகளுக்கு நேர்ந்த கொடூரத்துக்கு சரியான நியாயம் கிடைத்தால் போதும் என்றும் யாருடைய அனுதாபமும் தேவையில்லை என்றும் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

ALSO READ:  அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி...!

எங்கள் மனதைப் புரிந்து கொள்ளுங்கள். சரியான நேரத்தில் போலீசார் எங்களுக்கு உதவியிருந்தால் எங்கள் மகள் உயிர் பிழைத்திருப்பாள் என்றனர். அப்போது உதவாத போலீசார் இப்போது தன் வீட்டைச் சுற்றி அலைவது எதற்காக? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த விஷயம் குறித்து பிரதமரும் முதல்வரும் வாய் திறக்காதது ஏன் என்று கேட்டனர். குற்றவாளிகளை உடனடியாக தண்டிக்கச் சொல்லி போராடியவர்கள் மேல் தடியடி நடத்தப் பட்டதையும் கண்டித்தனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img