நாடே விவாதிக்கிறது! தெலங்கானா முதல்வருக்கு நேரமில்லையா! அலட்சியமா?!

Published:

kcr telangana - 2026

தெலங்காணா முதல்வருக்கு நேரமில்லையா? மூன்று நாட்களாக நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய டாக்டர் பிரியங்கா கொலை குறித்து புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

தெலங்காணா கவர்னர், மத்திய அமைச்சர் கிருஷ் ரெட்டி, மகளிர் கமிஷன் அங்கத்தினர்கள் வந்து குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி தைரியம் தெரிவித்தனர்.

ஆனால் முதல்வர் கேசிஆர் அலுவலகத்திலிருந்து கொலை குறித்து ஒரு கண்டனச் செய்தி கூட வெளிவரவில்லை என்று இப்போது புயல் எழும்பியுள்ளது. அதேபோல் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த போது மாநில உள்துறை அமைச்சர் செய்த விமர்சனம் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

முதல்வர் ஏன் அலட்சியம் காட்டுகிறார்? அவருக்கு நேரமில்லையா? மனமில்லையா? என்று ஊடக கவனம் திரும்பியுள்ளது. அமைச்சர் கேடிஆர் மட்டும் பிரியங்கா கொலை பற்றி போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை பற்றி மானிட்டர் செய்வதாக ட்வீட் செய்தார் .

ஆனால் முதல்வர் கண்டுகொள்ளாமல் இருப்பது பற்றி மாநில மீடியாக்கள் பெருமளவில் சர்ச்சையில் ஈடுபட்டுள்ளன.

ஹோம் மினிஸ்டர், பிரியாங்கா 100-க்கு போன் செய்யாமல் தங்கைக்கு போன் செய்தது பற்றி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடமே விமரிசனம் செய்தது குறித்து உறவினர்களும் பொதுமக்களும் ஆத்திரத்தில் உள்ளனர்.

இன்னொரு அமைச்சர், வீட்டுக்கு வீடு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய முடியாது என்று காமெண்ட் செய்தது கூட மக்களின் கோபத்தை தூண்டியுள்ளது.

இரு பெண் அமைச்சர்கள் வந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்து சென்றனர். ஆனால் முதல்வரின் செயல் பற்றி நெட்டிசன்கள் ஆத்திரத்தில் உள்ளனர்.

சிஎம் என்ன செய்கிறார்? தெலுங்கானாவில் தான் உள்ளாரா? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img