ஐந்தே நிமிடத்தில் வீட்டில் இருக்கும் பொருளைக் கொண்டு பர்பி!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
5கப்-பர்பி-1
5கப்-பர்பி-1

5 கப் ஈசி ஸ்வீட்
தேவையான பொருட்கள்
கடலை மாவு – ஒரு கப்
பால் – ஒரு கப்
தேங்காய்துருவல் – ஒரு கப்
ரீஃபைன்ட் ஆயில் – ஒரு கப்
சர்க்கரை – 2 கப்
ஏலக்காய்த்தூள் – அரை தேக்கரண்டி

செய்முறை
ஒரு வாணலியில் (இப்போது அடுப்பில் வைக்கவேண்டாம்) சலித்த கடலைமாவு, பால், மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்த தேங்காய் துருவல், ரீஃபைன்ட் ஆயில், சர்க்கரை இவை ஐந்தையும் போட்டு நன்றாக கட்டியில்லாமல் கலக்கவும்.
இந்த கலவையை அடுப்பில் வைத்து கிளறவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளறவும். ஏலக்காய்பொடி சேர்க்கவும்.
30 நிமிடம் கிளறியதும் நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும்.
விருப்பபட்டால் இதில் மஞ்சள் கலர் சேர்த்தும் செய்யலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.