ஆவுடையார்கோவில் முத்துமாரியம்மன் கோயிலில் கொலு வழிபாடு!

ஆன்மிகச் செய்திகள் திருச்சி லைஃப் ஸ்டைல் வீடியோ

ஆவுடையார்கோயில் குறிச்சிக்குளம் முத்துமாரியம்மன் கோயிலில் கொலு வழிபாடு நடந்தது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஆவுடையார்கோயிலில் திருவாவடுதுறை ஆதீனத்தை சேர்ந்த குறிச்சிக்குளம் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நடைபெறும் கொலு வழிபாட்டை முன்னிட்டு கோயில் வளாகத்தில் கொலு பொம்மைகள் அடுக்கப்பட்டு கொலு வழிபாடு நடைபெற்றது.

இந்த வழிபாட்டில் அரசு உத்தரவுப்படி சமுக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை திருவாவடுதுறை 24வது குரு மகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாணைப்படி கோயில் பணியாளர்கள் செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.