இப்படி செய்யணும் வேப்பம் பூ வடகம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
வெபாமரம் - 2026

வேப்பம்பூ வடகம்:
காய வைத்த வேப்பம்பூ – 3 கப்
உளுந்து – 1 கப்
மிளகு – 1 தேக்கரண்டி
பெரிய சீரகம் – 1 மேசைக்கரண்டி
சிறிய சீரகம் – 1 மேசைக்கரண்டி
வெட்டிய வெங்காயம் – 1/2 கப்
கறிவேப்பிலை – 2 – 3 நெட்டு
மிளகாய் பிளேக்ஸ் – 2 மேசைக்கரண்டி
உப்பு

மிளகு, பெரிய, சிறிய சீரகங்களை பொடித்து கொள்ளவும்
உழுந்தை 5- 6 மணித்தியாலங்கள் ஊற வைத்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் அரைத்த உளுந்தினுள் காய்ந்த வேப்பம் பூ மற்றும் ஏனைய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தண்ணீர் விடாது இறுக்கமாக குழைக்கவும்.
பின்னர் அதனை நெல்லிக்காயளவு உருண்டைகளாக உருட்டி சிறிது வடை போல தட்டையாக்கி சுத்தமான காய்ந்த ஒரு துணியில் (பொதுவாக தாத்தாவின் பழைய வேட்டி) அடுக்கி வெயிலில் நன்கு காய வைத்து எடுக்கவும்.
வேப்பம்பூ வடகம் தயார். இதனை ஒரு சுத்தமான் காய்ந்த டப்பாவினுள் போட்டு தேவையான போது எடுத்து எண்ணெயில் பொரித்து சோறு புட்டு போன்றவற்றுடன் சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.