Green zucchini fry
Green zucchini fry

பச்சை சுண்டைக்காய் பொரியல்

தேவையானவை:

பச்சை சுண்டைக்காய் – 200 கிராம், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – 4 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு கப், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சுண்டைக்காயை நசுக்கிப் போட்டு வதக்கவும். வதங்கிய உடன் சிறிதளவு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்ததும் தண்ணீரை வடித்துக்கொள்ளவும்.

வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, வேகவைத்த சுண்டைக்காயைப் போட்டு, தேங்காய்த் துருவலையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending