
தடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவோம் என்று மதுரையில் இந்து அமைப்பினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
வருகின்ற 10 -தேதி அன்று விநாயகர் சதுர்த்தி நடைபெற உள்ளது இதனால், தமிழக அரசு இந்த விழாவை கொண்டாட தடை செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் வேண்டும் என்று, இந்து மக்கள் நல இயக்கம் சார்பில் மற்றும் இந்து மகா சார்பில் கையில் விநாயகர் சிலை முக கவசம் அணிந்தபடி மதுரை மாவட்ட ஆட்சியரை மனு கொடுத்தனர்.
மதுரை மாநகரில் 10 இடங்களில் விநாயகர் சிலை வைத்து விழாவை கொண்டாட விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி வேண்டி ,மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர்.

பின்னர், இந்து மகாசபை மாநில அமைப்பாளர் அண்ணாதுரை செய்தியாளர் கூறும்போது:
தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி தமிழக அரசு இதை தடை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ள இந்து மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக முதலமைச்சர் கொரோனா என்ற கொடிய நோய் சொல்லியிருக்கிறார். இதற்கு நாங்கள் ஆதரிக்கிறோம். விநாயகர் சதுர்த்தி விழாவில், தமிழக அரசு தடையை மீறி நாங்கள் நடத்துவோம்.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், பள்ளி கல்லூரிகள், சினிமா தியேட்டர், மால்கள், ஹோட்டல், திருமண நிகழ்ச்சிகள், மதுபான பார் இதெல்லாம் தமிழக அரசு திறந்து வைத்திருக்கிறது. இதற்கு, கொரோனா வராதா ? தமிழக முதலமைச்சர் இந்து கடவுள் விழா மற்றும் இந்து மக்களை தடை செய்வது இந்து மகாசபை வன்மையாக கண்டிக்கிறது.

தமிழக அரசு இதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். நாங்களும் ஒத்துழைப்பு தருகிறோம். தமிழகம் முழுவதும் இந்து அமைப்புகளும் அமைப்புகள் சேர்ந்து விநாயகர் சதுர்த்தி விழாவை தடையை மீறி கொண்டாடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக… மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இந்து அமைப்புகள், அரசியல் கட்சியின் நிர்வாகிகள் ஆகியோருடன், விழாக்கள் நடத்துவது தொடர்பாக, அரசின் விதிமுறைகள், கட்டுபாடுகள் குறித்து கலந்துரையாடல் மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் முன்னிலையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில், விநாயகர் சிலை வைக்க, அரசு தடை விதித்துள்ளது பற்றி விளக்கமளிக்கப்பட்டது.