குரு பெயர்ச்சி பலன்கள் (2021-22): ரிஷபம்

Published:

குரு பெயர்ச்சி

குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022
20.11.2021 முதல் 13.04.2022 வரை

நிகழும் ப்லவ ஆண்டு கார்த்திகை மாதம் 4ம் தேதி சனிக்கிழமை இரவு 43:11:26 நாழிகைக்கு ஆங்கில வருடம் 2021, நவம்பர் மாதம், 20ம் தேதி இரவு 11:30:28 மணிக்கு குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது திருக்கணிதம் லஹரி அயனாம்ஸப்படி. கும்ப ராசியில் அவர் 13.04.2022 பிற்பகல் 03.49.47 மணி வரை சஞ்சரிக்கிறார். அதன் பின் மீன ராசியில் சஞ்சாரம்.

வாக்கிய பஞ்சாங்கம் படி 13.11.2021 ஐப்பசி மாதம் 27ம் தேதி இரவு 08.46 மணிக்கு கும்ப ராசிக்கு பெயர்கிறார்.

அடியேன் எப்பொழுதும் லஹரி அயனாம்ஸப்படி செல்வதால் இந்த குருப்பெயர்ச்சி பலன்கள் 20.11.2021 முதல் 13.04.2022 வரைக்குமான பலன்களை கணித்து இருக்கிறேன்.

வெறும் 144 நாட்கள் மட்டுமே கும்பத்தில் குரு சஞ்சாரம் ஏற்கனவே 06.04.2021 முதல் 14.09.2021 வரை கும்ப ராசியில் சஞ்சரித்த பலன்கள் போன குருபெயர்ச்சியில் தெரிவித்து இருந்தோம். இனி மேற்படி 144 நாட்களுக்கான பலன்களை ஒவ்வொரு ராசிக்காரர்களும் தெரிந்து கொள்ளலாம்.

gurupeyarchi2021 2022
gurupeyarchi2021 2022

குறிப்பு 1: இந்த 144 நாட்களுக்குள் மற்ற சூரியன், செவ்வாய், புதன் சுக்ரன் ராகு கேது இவர்களின் சஞ்சாரங்களையும் கணக்கில் கொண்டு கணிக்கப்பட்ட பலன்கள்

குறிப்பு 2 : இவை பொதுப்பலன்கள். இதைக் கொண்டு தீர்மானிப்பது அவ்வளவு சரியாக இருக்காது.  ஒவ்வொருவரும் அவருடைய ஜாதகத்தை அருகில் உள்ள ஜோதிடரிடம் காட்டி பலன்கள் கேட்டுப் பெறுவது சிறந்த ஒன்று. மேலும் லக்னத்தை ஒட்டியும் பலன் சொல்லி இருப்பதால் உங்கள் லக்னம் தெரிந்தால் அதையும் சேர்த்து பார்த்துக் கொள்வது நல்லது.!

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

குருபெயர்ச்சி பலன்கள் – பரிகாரங்கள் கணிப்பு:
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி (ரவி சாரங்கன்)
ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1-304, D1 Block, சித்தார்த் பௌண்டேஷன்
ஐய்யஞ்சேரி மெயின்ரோடு, ஊரப்பாக்கம் – 603210
மொபைல்(வாட்ஸப்) 8056207965,
லேண்ட்லைன் : 044-35584922
Email ID : mannargudirs1960@hotmail.com


2 rishapam
2 rishapam

ரிஷபம்

கிருத்திகை 2,3,4 பாதங்கள், ரோஹிணி 4 பாதம், மிருகசீரிடம் 1,2 பாதங்கள் முடிய


ரிஷப ராசி அன்பர்களே இந்த குரு பெயர்ச்சி ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை உங்களுக்கு வழங்க போகிறது காரணம் பத்தில் குரு வருவது ஆட்சிமாற்றம் அதாவது உங்களுடைய நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் இடமாற்றம் தொழில் மாற்றம் என்று மேலும் மார்ச் 17 2022 முதல் ராகு பகவான் 12ஆம் வீட்டிலும் கேது 6லும் இடப்பெயர்ச்சியாவது நன்மையைத் தரும் உங்களுடைய கடந்தகால தொல்லைகள் நீங்கும்

பொருளாதாரம் பொருத்தவரை நல்ல நிலையில் இருக்கும் சிறப்பாக இருக்கும் காரணம் குரு பகவானின் பார்வை இரண்டாம் இடத்துக்கு இருப்பதால் தனம் பெருகும் மற்ற கிரகங்கள் இந்த 144 நாட்களில் செய்யும்  சஞ்சாரம் சாதகமாக இருக்கிறது அதனாலும் இதுவரை உங்களுடைய உங்களுடைய முயற்சிகள் தடைபட்டு வந்திருந்தால் அது இப்போது பூர்த்தியாகும் உத்யோகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்

ALSO READ:  பஞ்சாங்கம் செப்.10 - வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

புதிய பதவி கிடைக்கலாம் வேற வேலை வெளிநாடு வாய்ப்பு என்று மனதுக்கு பிடித்தார் போல் அமையும் மேலும் சம்பள உயர்வு புதிய வீடு வாகனம் ஆபரணங்கள் இப்படி வாங்க தூண்டும் வீடு வாகன யோகங்கள் நன்றாக இருக்கிறது வீடு பழுது பார்ப்பது போன்ற செயல்களும் நன்றாகவே இருக்கும் மேலும் சொந்தத் தொழில் செய்வோர் தொழில் விரிவாக்கம் வருமானம் பெருகும் படி செய்யும் எதிர்பார்த்த வங்கி கடன் அரசு உதவி போன்றவை எளிதில் கிடைக்கும்

தொழிலில் இருந்துவந்த போட்டி நிலைகள் மாறி எதிரிகளை வீழ்த்தும் படி உற்பத்தி பெருகி விற்பனை அதிகரிக்கும் மற்ற அனைத்து பிரிவினருக்கும் நன்மை அதிகரிக்கும் குறிப்பாக விவசாயிகளின் முன்னேற்றமும் கட்டுமானத் தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றமும் மிக நன்றாக இருக்கும்

அதேபோல் பெண்கள் தங்களுடைய விருப்பங்களை பூர்த்தி செய்வார்கள் அதேபோல் புனித யாத்திரை கேளிக்கைகள் விருந்துகள் என்று மகிழ்ச்சியாக இந்த குருபெயர்ச்சி கழியும் நல்ல நிலை இருக்கிறது 

குடும்பம் : கணவன் மனைவிக்குள் ஒற்றுமை நீடிக்கும். கடந்த காலத்தில் மணக்கசப்பினால் அல்லது தொழில் உத்தியோகம் காரணமாக பிரிந்திருந்த தம்பதிகள் இந்த குரு பெயர்ச்சியில் சேர்ந்து விடுவார்கள் பின் ஒற்றுமை அதிகரிக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த திருமணம் நடைபெற, சிலருக்கு  குழந்தை பாக்கியம் உண்டாக இந்த பெயர்ச்சி சாதகமாக இருக்கிறது இல்லத்தில் அம்பும் அமைதியும் மகிழ்ச்சியும் நீடிக்கும் பெற்றோர்கள் பிள்ளைகள் ஒற்றுமையுடன் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வர் உறவுகளின் ஆதரவு இருந்து கொண்டிருக்கும் எல்லோருடனும் அனுசரித்து போவதால் மகிழ்ச்சியான குடும்பமாக அமையும்

ALSO READ:  பஞ்சாங்கம் செப்.07 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

ஆரோக்கியம் :  ஏற்கனவே மன உளைச்சல் அல்லது உடல் ரீதியான பாதிப்புகள் இருந்து நாள்பட்ட வைத்தியங்கள் செய்து கொண்டிருந்தவர்கள் அந்த வியாதிகள் குறைந்து மருத்துவ செலவை பெருமளவில் குறைத்து விடும் மகிழ்ச்சி ஏற்படும் வாழ்க்கை துணைவர் வகையிலும் மருத்துவ செலவுகள் இருக்காது அதேபோல பெற்றோர்கள் வகையில் இருந்துவந்த வைத்திய செலவுகள் கட்டுக்குள் இருக்கும் குறையவும் வாய்ப்பு அதிகம் பிள்ளைகள் வழியிலும் பெரிய ஆறுகள் இல்லை மகிழ்ச்சியான நிலைகள் இருப்பதால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் குடும்ப ஆரோக்கியம் நன்றாக இருக்கும்

வணங்க வேண்டிய தெய்வம் / நற்செயல்கள்:  இந்த  குரு பெயர்ச்சி தொடர்ச்சியாக வரும் ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு பலவித நன்மைகள் செய்வதால் உங்கள் குலதெய்வம் மற்றும் இஷ்டமான தெய்வம் இவற்றை வணங்குங்கள் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று விளக்கு ஏற்றுங்கள் முடிந்தவரையில் தான தர்மங்களை அதிகமாக செய்யவும் 

Related articles

Recent articles

spot_img