ஆர்வத்தோடு உண்ண.. சீரக சம்பா பனீர் பிரியாணி!

Published:

Chiraka Samba Biryani
Chiraka Samba Biryani

சீரக சம்பா பனீர் பிரியாணி
தேவையான பொருட்கள்
சீரக சம்பா அரிசி – அரை கிலோ
தக்காளி – 3
வெங்காயம் – 4
பச்சை மிளகாய் – 4
இஞ்சி பூண்டு விழுது – 1 சின்ன கப்
பனீா் பாக்கெட் – 1
எலுமிச்சை பழம் – 1 1/2
கொத்தமல்லி
புதினா
சீரக தூள் – 1 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
பிரியாணி மசாலா
முந்திரி – 10
உப்பு தேவையான அளவு
எண்ணெய்
நெய்

தேவையானப் பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும். சீரக சம்பா அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சோ்த்து நன்கு வதக்கவும்.

பின்னர் புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். அனைத்தும் நன்கு வதங்கியப் பிறகு தக்காளியை சோ்த்து வதக்கவும். தக்காளி சோ்த்தவுடன் சிறிதளவு உப்பு சோ்க்கவும். உப்பு சோ்த்து வதக்கினால் தக்காளி நன்கு வதங்கும்.

அடுத்து மேலே குறிப்பிட்டுள்ள தூள் வகைகளை சோ்க்கவும். அனைத்தையும் சேர்த்து கிளறிவிட்டு, அதில் அரிசி சேர்க்கவும்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

பின்னர் தேவையான அளவு தண்ணீா் விட்டு, உப்பு சோ்த்து, எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு மூடி விடவும். நான்கு விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

பனீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் பொரித்தெடுக்கவும். அதே நெய்யில் முந்திரியையும் பொரித்துக் கொள்ளவும்.,

குக்கரில் ப்ரஷர் அடங்கியதும் திறந்து, பொரித்த முந்திரி மற்றும் பனீரை சேர்த்து கிளறவும். சூடான சுவையான சீரக சம்பா பனீா் பிரியாணி ரெடி.

Related articles

Recent articles

spot_img