health tips - 2026

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: குடல் புழு, குழந்தைகள் வயிற்றில் பூச்சி, கழுத்தில் கட்டி, இருதயநோய்..!

லைஃப் ஸ்டைல் நலவாழ்வு
health tips - 2026

கழுத்தில் கட்டியா?

அயோடின் குறைவால் தைராய்டு சுரப்பிகள் பாதிக்கப்படுவதால் கழலை உண்டாகிறது. இவர்கள் கரிசலாங்கண்ணி, பொன்னாங் கண்ணி ஆகிய கீரைகளை அதிகம் சாப்பிடலாம்.

இசையிலே மகத்துவம்

அமைதியான இசைக் கருவிகளின் ஒலிகளால் இரத்த அழுத்தம் குறைகிறது. கண்களுக்கு கூர்மையும் மன ஒருமையையும் உண்டாக்கி ஆனந்தமயமான நிலைக்குக் கொண்டு வந்து இருதயத்தின் இறுக்கத்தைக் குறைக்கிறது.

இருதயப் பிணியாளருக்கு உணவு

இரத்தக் குழாய்களில் கொலஸ்டிரால் என்னும் கொழுப்புப் பொருளால் அடைப்பு ஏற்படுகிறது. அதனால் எளிய உணவு வகைகளை உண்ண வேண்டும். பச்சைக் காய்கறிகள், பழவகைகள், வர்ந்த பழங்கள். ஆவியில் வேக வைத்தக் காய்கறிகள், மோர். தேன், கோதுமைப் பண்டங்கள் சாப்பிடலாம். கொலஸ்டிராலைத் தூள் தூளாக்க தயிர் ஒரு சிறந்த உணவு. இனிப்புப் பண்டங்கள் காபி, டீ வகையறாக்கள் கூடாது. மது அருந்தக் கூடாது.

குடல் புழுக்கள் வெளியேற…

கருஞ்சீரகம் 5 கிராம் எடுத்துப் பொடி செய்து புளித்த காடி நீருடன் கலந்து வெறும் வயிற்றில் கொடுத்தால் பேதியாகும். அதில் குடல் புழுக்கள் வெளியாகும். அப்படி பேதியாகாவிட்டால் சாப்பிடவும். அதன் பிறகு அவசியம் பேதியாகும். ளகு ரசம்

குழந்தையின் வயிற்றில் பூச்சியா?

அன்னாசிப்பழம், பப்பாளிப் பழம் முதலியவற்றை சாப்பிடக் கொடுக்கலாம். வேப்பங்கொழுந்து துவையல். சுண்டைக்காய் வற்றல். பாகற்காய் பொரியல் முதலியவற்றையும் சாப்பிடப் பழக்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.