அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: முகம் பளபளக்க, முகப்பரு, ஒற்றை தலைவலி, ஊளைச்சதை..!

Published:

health tips - 2026

முகம் பளபளக்க…

பால் ஏடை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து வெந்நீரில் கழுவி வர சில நாள்களில் முகம் பளிச்சென்றாகிவிடும்.

மேக்னட் தெரபி

இது நமது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினில் இருக்கும் இரும்புச் சத்தை ஈர்ப்பதால் காந்த அலை திசுக்களில் பரவி இரத்த ஓட்டத்தை துரிதப் படுத்துகிறது. நோய்க்கிருமிகளை அழித்து இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. உடல் வலியை நீக்குகிறது. வீக்கம் வடிந்து விடுகிறது.

முகப்பருவுக்கு…

ஜாதிக்காயை சந்தனக் கல்லில் உரைத்து தினமும் பருக்கள் மீது இரவு பூசி வர பருக்கள் மறையும்.

ஒற்றைத் தலைவலியா?

அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் திராட்சை சாறு சாப்பிட தலைவலி குறையும். வலி மிகவும் அதிகமாக இருந்தால் திராட்சை சாறும். கறிவேப்பிலை சாறும் சம அளவு கலந்து ஒரு டம்ளர் சாப்பிட தலைவலி குணமாகும்.

ஊளைச் சதை குறைய…

உணவுக் கட்டுப்பாடாக இருப்பதுடன் அருகம்புல் சாறு. வாழைத் தண்டு சாறு, பூசணிச்சாறு பருகி வர உடல் பருமன் குறையும்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

Related articles

Recent articles

spot_img