சிங்கப்பூரில் தமிழர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

இலக்கியம் உலகம் நிகழ்ச்சிகள்

தமிழக அமைச்சர் பாண்டியராஜன் சிங்கப்பூரில் !

28.11.2017 மாலை 3 மணிக்கு சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் தமிழக தமிழ் வளர்ச்சி, கலை, தொல்லியல் மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் மா பா பாண்டியராஜன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி சிங்கை. தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஏற்பாட்டில் நடந்தது.

நிகழ்ச்சி நெறியாளர் சுப. அருணாச்சலம். வரவேற்புரை வழங்கியதுடன் ஒரு கோரிக்கை மனு ஒன்றையும் அமைச்சரிடம் அளித்தார்.

புலம் பெயர்ந்த தமிழர்களின் படைப்புகளுக்கும், தமிழறிஞர்களுக்கும் விருதுகளும் பரிசுகளும் அரசு சார்பில் சிறப்பாக வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் அடங்கியது அந்த மனு.

அடுத்து 3.15 க்கு அமைச்சர் உரையாற்றினார். அவருடைய சொந்த வாழ்க்கை, அரசியல் நுழைவு போன்ற வரலாற்றை முதலில் வெளிப்படையாக சொன்னார்.

அடுத்து தமிழ் மொழியின் தரம், பேசும் நாடுகள், பேசும் மக்களின் எண்ணிக்கை போன்ற புள்ளி விவரங்களைச் சொன்னார். தமிழ் அகராதி ஒன்றை உருவாக்க இருப்பதாகவும் திசைச்சொற்களை அதில் உள்ளடக்க இருப்பதாகவும் சொன்னார். உலகத்திற்கு பணியாளர்களை கொடுக்கும் அமைப்பை ஏற்படுத்த இருப்பதாகவும் சொன்னார்.

சென்னை அரும் காட்சியகத்தில் 11,000 அரும் பொருள்கள் இருப்பதாகவும், 502 ஸ்வஸ்திக் கிணறுகள் இருக்கின்றன என்றும், இவையெல்லாவற்றையும் உலகத்திற்கு காட்ட இருப்பதாகவும், சிங்கப்பூர் மரபுடைமை கழக த்துடன்  ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்ய இருப்பதாகவும், இனி அடிக்கடி சிங்கை வர இருப்பதாகவும் அறிவித்தார்.

பாண்டியராஜனுடன்
கலந்துரையாடல்!

பின்னர் நடந்த கலந்துரையாடலில் பலரின் கேள்விகளுக்கும் அமைச்சர் தெளிவாக பதில் தந்தார்.

முதலில் பாலா கேட்ட கேள்விக்கு , புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரச்சினைகளை தீப்பதற்கு ஒரு துறை உருவாக்கத் திட்டம் உண்டு என்றார். குணசேகரன் வழக்கமாகக் கேட்பதுபோல் கணினி துறை பற்றி கேட்டார்.

அடுத்து மா. அன்பழகன் கேள்வி: புலம் பெயர்ந்த தமிழர்களுக்கான பரிசுகளும் விருதுகளும் ஏற்கனவே தருவதாக செயலாளர் இராஜாராம் ஐ ஏ ஏஸ் அறிவிதிருப்பதை குறிப்பிட்டார்.

ஆனால் ஒரேகட்சி ஆட்சியிலேயே காப்பாற்ற முடியவில்லை. என்றும் அண்ணா நூற்றாண்டு நூல் நிலையம் சிங்கப்பூர் நூல் நிலையத்தைப் பார்த்து கட்டியது. அதன் பராமரிப்பு அரசியல் காரணங்களால் கவனிக்கப்படாமல் போய் விட அவல நிலையை மாற்ற திட்டம் உண்டா? என்ற கேள்விககு நிச்சயம் உறுதிமொழி காப்பாற்றப்படும் என்றார்.

அடுத்து பிச்சினிக்காடு இளங்கோ மொழி தொடர்பாகவும், சாமிக்கன்ணு கல்வி தொடர்பாகவும் டாக்டர் தீன் , கலைஞருக்குப்பின் எந்த முதல்வரும் சிங்கை வராததையும் பற்றி கேட்டார்கள். அதற்கும் பதில் தந்த பாண்டியராஜன், உலக முதலீட்டார்கள் மா நாட்டை விரைவில் நடத்தப்படும் என்றார்.

நிகழ்ச்சி மாலை 4.25க்கு
நிறைவடைந்தது.

அமைச்சர் பாண்டியராஜனுக்கு திரு.இரா.தினகரன்சிறப்பு செய்கிறார்
அருகில் பேராசிரியர் சுப.திண்ணப்பன்.

செய்தி… ராமன். சிங்கப்பூர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.