நூலாசிரியர் மாரிதாஸுக்கு நம் நன்றி!

இலக்கியம் நூலரங்கம் லைஃப் ஸ்டைல்

maridassbook - 2026

அந்நிய மதமாற்ற அமைப்புகளும், சீன பாகிஸ்தான் ஆதரவு கொண்ட சித்தாந்தங்களை மேற்கொள்ளும் இடதுசாரி இஸ்லாமியவாத அமைப்புகளும் ஒன்றாக இணையும் இடம் இந்தியா வலிமையும் வளமும் சமுதாய நல்லிணக்கமும் கொண்ட நாடாக மாறிவிடக் கூடாது என்பதுதான். அதற்கான வேலைகளை அவை மேற்கொள்ளுகின்றன. இந்தியாவில் இந்த மூன்று நாசகார சக்திகள் முழுமையாக இணைந்திருக்கும் ஒரு மாநிலம் தமிழ்நாடு.

இந்த இந்திய எதிர்ப்பு, இந்து வெறுப்பு சக்திகளுக்கு எதிராக இன்றைக்குத் தமிழ்நாட்டில் எழுந்திருக்கும் முக்கியமான உண்மையின் உரத்த குரல் மாரிதாஸ். அவர் ஒரு தனிமனிதரல்ல. அவர் இன்றைய தமிழகத்தின் கட்டாயத் தேவை.

நான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்? என்ற அவரது இந்தப் புத்தகம் 2019- நாடாளுமன்றத்தேர்தல் காலகட்டத்தில் வந்திருப்பது தமிழகத்தின் நல்லூழ். இந்த நூல் உங்களைச் சிந்திக்கச் சொல்கிற நூல். நம் வருங்கால சந்ததிகள் ஊழலற்ற, வலிமையான, வளமான தமிழ்நாட்டில், ஒன்றுபட்ட பாரதத்தில் வாழ நீங்கள் கட்டாயமாகப் படிக்கவேண்டிய நூல் இது. நீங்கள் படியுங்கள்; படித்துப் பிறரையும் படிக்கச் சொல்லுங்கள்; பரிசாக இந்த நூலைக் கொடுங்கள்.

நூலாசிரியர் மாரிதாஸுக்கு ஓர் இந்தியராக, தமிழராக நாம் ஒவ்வொருவரும் நம் நன்றியைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

– அரவிந்தன் நீலகண்டன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.