‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

Published:

arunthamizh 50 book release - 2026

இலக்கியச்சாரல் அமைப்பின் நிறுவனர் கவிமாமணி இளையவன், சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல் அலுவலகத்தில் வைத்து வெளியிட்டார்.

இந்த அமைப்பின் பொருளாளர் பாமா ரவி, இந்து சமய அறநிலையத்துறை கண்காணிப்பாளர் (பணி நிறைவு) என். திருமலை, விஜயலெக்ஷ்மி திருமலை ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.

ஜெயஸ்ரீ எம். சாரி எழுதியுள்ள இரண்டாவது நூலான அருந்தமிழ் 50 என்ற கவிதை நூல், 50 தலைப்புகளைக் கொண்டது. இந்நூலினை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார் இளையவன்.

தன் ஏற்புரையில் நூலாசிரியர் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய இளையவன், காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவ பானுமதி ரமேஷ், வாழ்த்துரை வழங்கிய ஆன்மீக சொற்பொழிவாளர் சீதாலெக்ஷ்மி, இலக்கியச் சாரல் இதழின் ஆசிரியர் ரெ. முரளி, நூல் வெளிவர உதவியவர்கள் என அனைவருக்கும் தன் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

Related articles

Recent articles

spot_img