சிங்கப்பூர் இலக்கிய வட்டம் – கம்பன் ஒரு பத்திரிகையாளன் சிறப்பு நிகழ்ச்சி

 இலக்கிய வட்டம் அனைவரையும் இந்த நிகழ்வுக்கு அழைக்கிறது.

 
” பெறுவீர்  பிழையின்றிப்  பீடளிக்கும்  வண்ணம்,  
வருமாண்டில்  வற்றா வளங்கள்”- தருமாறு, 
வேண்டுகிறேன்   ஈசனை: –   ”வெற்றிபெற  நண்பர்பால்  
ஆண்டவனே  நீகூட்(டு)  அருள்”. 
    
=================================================================================

ஜனவரி  மாத ”இலக்கிய வட்டம்” கூட்டம்  10-01-2016  ஞாயிறு பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும். 
இடம் பூன் கெங் சாலையில் உள்ள  காலாங் சமூக மன்றம்,
 
பேச்சாளர்  கலைமகள் பத்திரிகை ஆசிரியர்   கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்.   
 
தலைப்பு :- கம்பன் – ஒரு பத்திரிகையாளன்
 
 
வழக்கம்  போல  வெண்பாவில்  அழைப்பு.
 
எங்கணும்    இல்லை,   இவரொத்த   பேச்சாளர்;
சங்கரனார்  பேச்சென்றும்  சர்க்கரையே! – பொங்குதமிழ்
பேச்சினால்  பீடுமிகப்   பெற்றவர்க்(கு)   உற்றபுகழ்,
ஆச்சரியம்   இல்லை  அறி.
 

 
குலையாத   நல்லாற்றல்   கொண்டவராம்;    நல்ல
”கலைமகளி”ன்   ஆசிரியர்   கண்டோம். –  அலைஅலையாச் 
சாடிவரும்  செய்தி   சகலருக்கும்  ஈந்திடுவார்; 
ஓடிவந்து  நீமாந்(து)    உவப்பு.
 
 
 
பத்திரிகை   ஆசிரியர்   பாங்கினில்   கம்பன்சீர்,
சித்தரித்(து)    ஈவார்  சிறப்புடனே. – வித்தகர்தம்
மாரியெனும்  பேச்சால்    மகிழ்வுறவே வந்திடுவீர்
கூறியதை   உள்வாங்கிக்    கொண்டு.
 
 
அனைவரும் வருக என்று கேட்டுக்கொள்கிறோம். 
 
 –  அ. கி. வ