நிகழ்ச்சிகள்

Homeஇலக்கியம்நிகழ்ச்சிகள்

தமிழ் தினசரி இணையத்தின் பத்தாம் ஆண்டு: தெய்வத் தமிழர் விருது வழங்கும் விழா!

தமிழ் தினசரி இணையத்தின் பத்தாம் ஆண்டில், ஆன்மிக, சமூகத் தொண்டாற்றியவர்களுக்கு  ’தெய்வத் தமிழர்’ விருது வழங்கும் விழா, சென்னை மயிலாப்பூரில் உள்ள கோகலே சாஸ்திரி ஹாலில் நடைபெற்றது. மார்ச் 10ம் தேதி ஞாயிறு...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தமிழ் தினசரி இணைய இதழின் பத்தாம் ஆண்டு விழாவில்… கவனம் ஈர்த்த விஷயங்கள்!

மார்ச் 10 அன்று மாலை 5.30 மணிக்கு மயிலை கோகுலே சாஸ்திரி அரங்கில் செங்கோட்டை ஶ்ரீராமின் இறைவணக்கமுடன் தொடங்கியது தமிழ் தினசரி மின்பத்திரிக்கையின் 10 ஆவது ஆண்டு விழா, தெய்வத் தமிழர் விருது...

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது. 

Explore more from this Section...

‘தமிழ் ஐகான்ஸ்’  கேட்லாக் வெளியீட்டுவிழா !

மறைந்த இசைமேதை  எம் எஸ் என்கிற எம் எஸ்.சுப்புலட்சுமி பற்றிய ஆர்ட் கேலரியின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஏ.எல்.எஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஜெயந்தி கண்ணப்பன் மற்றும்  வருமான வரித்துறை ஆணையர் டாக்டர் சீனிவாசராவ்.  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு'கேட் லாக்' கை வெளியிட்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் திருமதி ஜெயந்தி கண்ணப்பன் பேசும் போது, "நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். இங்கே எம்.எஸ் அவர்கள் பற்றிய ஓவியக் கண்காட்சியைச் சுற்றிப் பார்த்தேன். மிக அருமையாக இருந்தது. எம்.எஸ். அம்மா எனறாலேஅவரது அழகிய தோற்றமும்,  மூக்கின் இரு பக்கமும் ஜொலிக்கும் வைரமுக்குத்தியும் ,காதுகளில் மின்னும் வைரத்தோடும் , நெற்றியில் பளிச்சிடும் குங்குமப் பொட்டும் மனதில் வரும். அவரது்  தோற்றமேஇந்தியப் பெண்ணின் அடையாளமாக இருந்தது. அவர் சினிமாவிலும் பெரிய வெற்றி பெற்று இசையுலகிற்காகத்  தன்னை அர்ப்பணித்துப் புகழ் பெற்று விளங்கினார். அவருக்குக் கிடைக்காத விருதுகளும் இல்லை . பெருமைகளும் இல்லை எனலாம். .அப்படிப்பட்ட எம், எஸ். அம்மா அவர்களின் பலவித முக பாவங்கள் கொண்ட ஓவியங்கள், பலவித தோற்றத்திலான ஓவியங்கள் என அரிய முயற்சியாக இருந்தது. அது மட்டுமல்ல எம்.எஸ். பற்றிய அரிய புகைப்படங்களின் கண்காட்சியும் இருந்தது. இம் முயற்சியில்  வெங்கடேசன், உதயசங்கர் என இரு இளைஞ ர்கள் ஈடுபட்டு செய்து இருப்பது பாராட்டுக்குரியது. இதைநார்வே, ஸ்வீடன், பிரான்ஸ் போன்ற ஏழு நாடுகளிலும் நடத்த இருக்கிறார்கள். நம் நாட்டு தொன்மையை கலைப்பெருமையை நாடு கடந்து கொண்டு சேர்க்கும் இம்முயற்சி  பாராட்டுக்குரியது. "என்றார். வருமான வரித்துறை ஆணையாளர் டாக்டர் சீனிவாசராவ் பேசும் போது, '"நான் ஆந்திராக்காரர் . இன்று இங்கே கூடியிருப்பவர்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன். உண்மையிலே இது ஒரு மிராக்கள் தான் வெவ்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் நாம் இங்கே ஒன்றாக இருப்பதேநம்மை இணைத்து இருப்பதே இசையின் எம்.எஸ்ஸின் தெய்வீக சக்தி என்றே சொல்ல வேண்டும். இங்கே கண்காட்சியை பார்த்தேன். பாவங்களில் நவரசங்கள்தான்  இருக்கிறது என்பார்கள் ஆனால் இங்குவரையப்பட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டு இருக்கிற ஓவியங்களில் நவரசங்களைத் தாண்டிய பாவங்களைப் பார்த்தேன். இந்த அவசர உலகத்தில் கலையை ரசிக்கவும்  கலைஞர்களை மரியாதை செய்யவும் யாருக்கும் தோன்றுவதில்லை. அதற்கு நேரமில்லை. இந்தக் காலத்தில் இம் முயற்சியில் ஈடுபட்டுள்ள வெங்கடேசன்,உதயசங்கர் இருவரையும் பாராட்டுகிறேன். இது உலகின் பிற நாடுகளுக்கும் செல்ல இருப்பது மகிழ்ச்சிக்குரியது " என்றார். நிகழ்ச்சியில் இயக்குநர் வெங்கடேசன் பேசும் போது , " தமிழ்ச் சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த ஆண்டு எம் எஸ் அம்மாவின் நூற்றாண்டும் கூட. இதையொட்டி ,'தமிழ் ஐகான்ஸ்'  கேட்லாக் வெளியீட்டுவிழா : படங்கள்: கேலரி! என்கிற பெயரில் தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற சிறந்த ஆளுமைகளை மக்கள் முன் கொண்டு சேர்க்கும் பணியை சாய்மீராமீடியாஸ் கொண்டு செல்ல விருக்கிறது. முதலில் எம் எஸ் அம்மாவிடமிருந்து தொடங்குகிறோம். இந்த  ஆரட் கேலரி யை நிறைய பேர் பார்த்துப் பாராட்டினார்கள். இம்முயற்சியில் என்னுடன் இணைந்துகொண்டிருக்கிறார் உதயசங்கர்.எங்கள் பணி தொடரும்'' என்றார். இந்நிகழ்ச்சியில் 'மியூசி மியூசிக்கல்' ஹரிச்சரன்தாஸ் உள்ளிட்ட இசை ஆர்வலர்கள் பலரும்  கலந்து கொண்டனர்.

மண்ணில் தெரியுது வானம்- நாவல் மறுபதிப்பு வெளியீட்டு நிகழ்ச்சி

சென்னை: எழுத்தாளர் சிதம்பர சுப்ரமணியம் எழுதிய மண்ணில் தெரியுது வானம் நாவலின் மறுபதிப்பு வெளியீட்டு விழா ஞாயிற்றுக் கிழமை சென்னை மயிலாப்பூர் பி.எஸ்.உயர்நிலைப்பள்ளி வளாக அரங்கில் நடைபெற்றது. ந.சி.சு அறக்கட்டளை சார்பில் ந.சிதம்பர...

காளி மகாசக்தி பற்றி கீழாம்பூர் பேச்சு!

யாதுமாகி நின்றாய் - காளி! எங்கும் நீ நிறைந்தாய்,தீது நன்மை யெல்லாம் - காளி! -தெய்வ லீலை யன்றோ?...பூத மைந்தும் ஆனாய் - காளி! - பொறிக ளைந்தும் ஆனாய்,போத மாகி நின்றாய்...

யாதுமாகி நின்றாய் காளி: சிங்கப்பூரில் சொற்பொழிவு

சிங்கப்பூர் டெப்போ ரோடு அருள்மிகு ருத்ரகாளியம்மன் திருக்கோவில் மண்டபத்தில் நேற்று மாலை கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் அவர்கள்"யாதுமாகி நின்றாய் காளி.." என்ற தலைப்பில் சுமார் ஒன்றேகால் மணி நேரம் அருமையான சொற்பொழிவினை வழங்கினார்...

சிங்கப்பூர் இலக்கிய வட்டம் – கம்பன் ஒரு பத்திரிகையாளன் சிறப்பு நிகழ்ச்சி

 இலக்கிய வட்டம் அனைவரையும் இந்த நிகழ்வுக்கு அழைக்கிறது.  ” பெறுவீர்  பிழையின்றிப்  பீடளிக்கும்  வண்ணம்,  வருமாண்டில்  வற்றா வளங்கள்”- தருமாறு, வேண்டுகிறேன்   ஈசனை: -   ”வெற்றிபெற  நண்பர்பால்  ஆண்டவனே  நீகூட்(டு)  அருள்”.     ================================================================================= ஜனவரி  மாத ”இலக்கிய...

SPIRITUAL / TEMPLES