உலகமகளிர்தினத்தை முன்னிட்டு சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின்பெண்கள் கல்லூரியில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட மகளிர் தின விழா நடைபெற்றது.
விழாவில் திருமதி பிரேமலதவிஜயகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றிவைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய திருமதி பிரமலதா விஜயகாந்த், பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
ஜெயின் சமூகம் கலாச்சாரத்தில் சிறந்து விளங்குவதாக தெரிவித்த அவர் சிறந்த மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களை சிறப்பு விருந்தினராக கெளரவிக்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகத்தை கேட்டுகொண்டார் ..
படிப்பது மட்டும் பெண்கள் என இருந்துவிடாமல் அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேற வேண்டும் என்று தெரிவித்தார்.மேலும் தனது கல்லூரி கால அனுபவங்கள் மற்றும் நினைவுகளை ,மாணவிகளோடு பகிர்ந்து கொண்டார் எந்த நிகழ்ச்சி நடைபெற்றாலும் பெண்கள் தங்களாக முன்வந்து கலந்து கொண்டு பங்காற்ற வேண்டும் .என்று பேசிய அவர்
கல்லூரி நாட்களில் விளையாட்டில் நான் சிறப்பாக விளங்கியதால் சிறப்பு விருந்தினராக கெளரவிக்கபட்டதாக தெரிவித்தார் இந்த கல்லூரி காலத்தை அனைத்து பெண்களும் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார்.
அனைவரையும் பாதுகாக்க கூடிய பிறப்பாக பெண்கள் இருப்பதாக தெரிவித்த அவர் இதன் காரணமாக தான் கேப்டன் தனது கட்சி, நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கி வருவதாக தெரிவித்தார்.
மேலும் பெண்கள் மன அழுதத்தை நீக்கி கொள்ள வேண்டும் என்றும் பேசினார் . மேலும் இந்த நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகி அனிதா கார்த்திகேயன், மருத்துவர் ஜெயந்தி கலாநிதி,கல்லூரி முதல்வர் மாலதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி நிர்வாகம் சார்பில் திருமதி பிரமலதா விஜயகாந்திற்க்கு நினைவு பரிசு வழங்கி கெளரவித்தனர்
பெண்கள் அனைத்துதுறைகளிலும் சிறந்த விளங்கவேண்டும் -பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
Popular Categories



