பள்ளி அறைக் காதல்! நீ பார்க்கும் பார்வையும் சிரிக்கும் சிரிப்பும் நீ என்னைக் காதலிக்கிறாய் என்பதைப் புரிய வைக்கிறது..! ஆனால்… வேண்டாம் பெண்ணே..! மீசை கூட முளைக்காத வயதில்… என்னால் தாடி வளர்க்க முடியாது! பள்ளியறைக் காதல் ! உன் கண்ணின் சிமிட்டலும் உதட்டுக் குவிதலும் உன் ஆசையின் உச்சத்தை எனக்குப் புரிய வைக்கிறது! ஆனால்… வேண்டும் பெண்ணே! பாஷை கூட தேவையில்லாத தனிமையில் என்னால் பேசிக் கொண்டிருக்க முடியாது!
பள்ளி யறைக் காதல்
Popular Categories



