உனக்காக ஏங்கித் தவித்தேன்.. வருகையை முழக்கத்துடன் தெரிவித்து வான் விட்டு இறங்கி வந்தாய்… சன்னமாய்த் தூறியபோது சன்னலின் கதவுகள் திறந்தே கிடந்தன… வரவேற்காது கிடந்தேனோ? வலிமையைக் காட்டிவிட்டாய்! என் பார்வையில் சன்னலுக்கு வெளியே கொட்டியபடி நீ! உன் பார்வையில் சன்னலுக்கு உள்ளே ஒட்டியபடி நான்! கண நேரம்தான்… கருணைமுகம் காட்டி கனமழையாய் நீ கதவைத் தட்டும்போது… பாராமுகத்துடன் நான் பதுங்கியிருக்கலாமோ? கதவு திறந்து வெளியில் வந்தேன்… கருணைமுகம் காட்டினாயோ? உன் கனத்தை என் மீது இறக்காமல்… விருட்டென்று வெறிச்சோடிவிட்டாயே ! மழையே… !
கருணை மழை !
Popular Categories



