காலம் ஓடுகிறது… காலன் துரத்துகிறான்… கன்னி உன்னுடன் செலவிட வேண்டிய நேரம்… கணினியுடன் செலவிட்டு காலம் கழிகிறது! சுகத்தை நாடி… இரண்டிலும் சோகத்தையே பரிசாய்ப் பெற்ற நிலை! கன்னி கொல்லும் நேரத்தை கணினி கொன்று தீர்க்கிறது! குப்பைகள் குவிந்துவிட்ட விண்டோஸ் மண்டை! இத்துப் போன புரோக்ராம்கள்! செத்துப் போன ப்ரௌஸர்கள்! சுத்திக் கொண்டே பொறுமையை சோதிக்கும் ஜாவா அப்ளிகேஷன்ஸ்! வேக வேலைக்காய் உருவெடுத்தது… வேளையைக் கொலை செய்கிறது! வாழ்நாளை மரணத்தின் பாதை நோக்கி வேகப் படுத்துகிறது..! உன்னைப் போல் என் வாழ்க்கையுடன் ஒன்றிவிட்ட கர்ண குண்டலமாய் கணினி! உன்னை … என்னில் இருந்து அகற்றிவிட்டால் நான் சூன்யம்! விரைந்து தெரிகிறது காலனின் ராஜ்யம்!
காலத்தை வீணடிப்பாயோ?
Popular Categories


