ஒளி தீப விழா…!

Published:

narakasura bama - 2026

 ஒளிதீப விழா”  கவிதை: மீ.விசுவநாதன் 

கண்ணா கண்ணா நீதான் – மாமன்
கம்ச(ன்) உயிரை மாய்த்தாய்
கண்ணா கண்ணா நீதான் – நர
காசு ரனுயிர் ஓய்த்தாய்

கண்ணா கண்ணா நீதான் – அவன்
கடேசி ஆசை ஈந்தாய்
கண்ணா கண்ணா உந்தன் – பெருங்
கருணை தீப ஒளிதான்.

விண்ணில் உள்ள தேவ – நிலை
வேண்டு வோர்க்க ளித்தாய்
எண்ணி(ல்) உந்தன் சக்தி – தீமை
எதிர்க்க வென்றே நின்றாய்

தண்ணில் சூட்டி லெங்கும் – உன்
தன்மை உண்டு என்றாய்
மண்ணில் எங்கும் யார்க்கும் – தீப
மகிமை அறிய வைத்தாய்.

அசுர குணத்தைத் தானே – நீ
அரக்கன் என்று கொன்றாய்
உசுரக் குடிக்கும் ஆசை – அதை
ஒழிக்க கீதை சொன்னாய்

பசுவின் தலைவன் உன்னுள் – யாவும்
பார்த்தல் ஞானம் என்பாய்
நிசமாம் உன்னைக் காண -ஒளி
தீப விழாவைத் தந்தாய்.

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

Related articles

Recent articles

spot_img