அடல் பிஹாரி வாஜ்பாய் கவிதைகள்

இலக்கியம் கவிதைகள் லைஃப் ஸ்டைல்

Modi Vajpayee - 2026

அடல் பிஹாரி வாஜ்பாய் – கவிதைகள் -2

ஹார் நஹீ மானூங்கா…ரார் நயீ தானுங்கா

கால் கே கபால் பர் திகாதா மிடாதாஹூ
கீத் நயா காதாஹூ

ஹோகர் ஸ்வதந்த்ரதா மே னே கப் பாஹா ஹை
கர் லூ ஜக்கா குலாம்?
மைனே தோ சதா சுகாயா ஹை கரானா
அப்னே மன் கோ குலாம்
கோபால் – ராம் கே நாமோம் பர்
கப் மை னே அத்யாசார் கியே?

கப் துனியா கோ ஹிந்து கர்னே கர் கர்மே
நர ஸம்ஹார் கியே?
கோயி பதாயே காபூல் மே ஜாகர்
கித்னீ மஸீத் மை தோடீ?

சீபூ – பாக் நஹீ, ஷட் ஷட் மானவ் கே ஹ்ருதய் ஜீத்னே கா நிஸ்சய்?
ஹிந்தூ தன் – மன் ஹிந்தூ ஜீவன் ரங் – ரங் ஹிந்தூ மேரா பரிசய்.

தமிழில்…

தோல்வியை ஏற்க மாட்டேன். போருக்கு அஞ்சமாட்டேன்.

நெற்றியில் காலன் எழுதிய பழைய எழுத்தை அழிப்பேன். புதிதாக எழுத வைப்பேன்… புது கீதத்தைப் பாடுவேன்.

விடுதலை அடைந்தபின் உலகத்தை அடிமைப்படுத்த வேண்டும் என்று நான் என்றாவது விரும்பினேனா?

மனதின் மேல் கட்டுப்பாடு செலுத்த வேண்டுமென்றுதான் நான் இத்தனை காலம் போதித்தேன்.

ராமர் கிருஷ்ணர் பெயரால் நான் எப்போது கொடூரங்கள் இழைத்தேன்?

உலகனைத்தையும் ஹிந்த்துவத்திற்கு மாற்ற வேண்டுமென்று ஒவ்வொரு வீட்டிலும் மனிதர்களை எப்போது கொன்று குவித்தேன்?

காபூலில் நான் எத்தனை மசூதிகளை இடித்தேன் என்று யாராவது சொல்ல முடியுமா?

எல்லைகளை அல்ல, லட்சக்கணக்கான மனித உள்ளங்களை வெல்லுவதே என் சங்கல்பம்.

என் உடல் ஹிந்து. என் எண்ணம் ஹிந்து.
என் வாழ்க்கை ஹிந்து.

என் ஒவ்வொரு ரத்தத் துளியும் ஹிந்து.

–தமிழாக்கம் – ராஜி ரகுநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.